பாதிக்கப்பட்ட சிச்சுவான் மாநிலத்திலுள்ள வெளிநாட்டவர்களை சீனா ஆக்கப்பூர்வமாக தேடி உதவி செய்து வருகிறது. 45 வெளிநாட்டினர், கண்டறியப்பட்டுள்ளனர். அவர்கள் பாதுகாப்பாக இருக்கின்றனர் என்று சீன வெளியுறவு அமைச்சின் செய்திதொடர்பாளர் சி காங் இன்று பெய்ஜிங்கில் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
சீன வெளியுறவு அமைச்சகம், சீனாவிலுள்ள தொடர்புடைய வெளிநாட்டு வாரிங்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டு, அவற்றுடன் ஒருங்கிணைத்து, காணாமல் போன வெளிநாட்டவர்களை கண்டறிய பாடுபட்டு வருகிறது. பாதிக்கப்பட்ட பிரதேசத்திலுள்ள வெளிநாட்டவர்களுக்கு காலதாமதமின்றி உதவி அளித்துள்ளது என்று சி காங் தெரிவித்தார்.
|