அண்மையில் பாதிக்கப்பட்ட சிச்சுவான் மாநிலத்தில், தொற்று நோய் மற்றும் எதிர்பாராத பொது சுகாதார நிகழ்ச்சிகள் எதுவும் நிகழ வில்லை என்று சீன அரசவை பேரிடர் நீக்க பணி தலைமையகத்தின் சுகாதார நோய் தடுப்பு பணியகத்தின் தலைவர் கோ ஜியாங் இன்று பெய்ஜிங்கில் தெரிவித்தார்.
நிலநடுக்கம் நிகழ்ந்தவுடன், சீன சுகாதார அமைச்சகம், முன்னெச்சரிக்கை அமைப்பு முறையை துவக்கி, பாதிக்கப்பட்ட பிரதேசத்துக்கு மருத்துவ சிகிச்சை அணியினரை அனுப்பியது. இவ்வாறு மருத்துவ சிகிச்சை, நோய் தடுப்பு ஆகிய பணிகளை மேற்கொண்டது என்று அரசவை செய்தி பணியகத்தின் செய்தியாளர் கூட்டத்தில் அவர் தெரிவித்தார்.
|