ஸ்சுவான் நிலநடுக்க சீற்றம் நிகழ்ந்த பின், சர்வதேசச் சமூகத்தின் அனுதாபம், புரிந்துணர்வு, ஆறுதல் மற்றும் உதவியை சீனா பெற்றுள்ளது. இதற்கு சீன அரசு மற்றும் மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர். சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் சின் காங் இன்று பெய்சிங்கில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் இவ்வாறு தெரிவித்தார்.
இன்று பிற்பகல் 2 மணி வரை, பல்வேறு வழிமுறைகள் மூலம் சீன அரசு மற்றும் மக்களுக்கு 151 நாடுகளின் தலைவர்கள் மற்றும் 14 சர்வதேச அமைப்புகள் ஆறுதலையும் உதவியையும் தெரிவித்தனர் என்று சின் காங் கூறினார்.
முழுமையற்ற புள்ளிவிபரங்களின் படி, 10 கோடி அமெரிக்க டாலர் சர்வதேச உதவி தொகையையும், ஒரு கோடி அமெரிக்க டாலர் மதிப்புள்ள நிவாரணப் பொருட்களையும் சீனா பெற்றுள்ளது. நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு சிறப்பு மீட்புதவிக் குழுவை அனுப்ப ஜப்பான் அரசு இணங்கியதற்கு, சீன அரசு நன்றி தெரிவித்தது.
|