• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-05-15 18:54:15    
சர்வதேசச் சமூகத்தின் ஆறுதல்

cri

சீன சிச்சுவானில் நிலநடுக்கம் நிகழ்ந்த பின், சீனாவின் பேரிடர் நீக்கப் பணிக்கு நிதி அல்லது மனிதநேய உதவியை சர்வதேச சமூகம் நேற்று தொடர்ந்து, வழங்கி வருகின்றது.

சீனாவின் பேரிடர் நீக்கப் பணிகளுக்கு ரஷியா தொடர்ந்து உதவியை வழங்கும் என்று அதன் வெளியுறவு அமைச்சர் மீண்டும் உறுதிப்படுத்தினார். பாகிஸ்தான் அரசு மற்றும் மக்களின் சார்பில் அதன் தலைமை அமைச்சர் Gilani ஆறுதல் தெரிவித்தார். தவிர, கசகஸ்தான், ஜார்ஜியா, உக்ரைன், ஈரான், துருக்கி முதலிய நாடுகளின் தலைவர்கள் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு ஆறுதல் தெரிவித்ததோடு, சீன அரசு மற்றும் மக்களின் முயற்சிக்கு ஆதரவு அளித்தனர்.

தற்போது, சௌதி அரேபியா, சீனாவுக்கு 5 கோடி அமெரிக்க டாலர் நிதி மற்றும் ஒரு கோடி அமெரிக்க டாலர் மதிப்புள்ள நிவாரணப் பொருட்களை வழங்கியுள்ளது. அமெரிக்க அரசு, சீனாவுக்கு 5 இலட்சம் டாலர் நிதி உதவி வழங்கியுள்ளது.
ரஷியாவின் மனிதநேய உதவி பொருட்களை ஏற்றிய 2 விமானங்கள் chengduவை சென்றடைந்தன. 10 இலட்சம் பவுண்ட் மதிப்புள்ள மீட்பு உதவி பொருட்களை, பாதிக்கப்பட்ட பிரதேசத்துக்கு அளிப்பதாக பிரிட்டன் அரசு தெரிவித்தது. 2 இலட்சத்து 50 ஆயிரம் யூரோ மதிப்புள்ள உதவி பொருட்களை ஏற்றிய பெரிய விமானத்தை, பிரான்ஸ் நாளை அனுப்பவுள்ளது. ஜப்பானின் பல்வேறு வட்டாரத்தினர் பாதிக்கப்பட்ட பிரதேசத்துக்கு ஆக்கப்பூர்வமாக உதவி அளிக்கின்றனர். இந்தியா, பாகிஸ்தான், பெல்ஜியம், இத்தாலி, மெக்சிகோ, தென்கொரியா முதலிய நாடுகளும், ஐ.நாவின் குழந்தை நிதியம் உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளும், சீனாவுக்கு உதவி செய்கின்றன.

அதே வேளையில், கத்தார், தாய்லாந்து, கனடா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் , பிலிப்பைன்ஸ், மெக்சிகோ, இந்தோனேசியா ஆகிய நாடுகளில் வாழ்கின்ற சீனர்களும் கல்வி பயில் கிடைபு சீன மாணவர்களும், கடந்த சில நாட்களாக, நடவடிக்கைகள் மூலம், பாதிக்கப்பட்ட மக்களுக்கு அன்பைத் தெரிவித்தனர்.

தவிரவும், தென் கொரியா மற்றும் சிங்கபூரின் செய்தி ஊடகங்கள், நேற்று கட்டுரையை வெளியிட்டு, சீன அரசின் பேரிடர் நீக்கப் பணியைப் பாராட்டின.