பல்வேறு நாட்டுத் தூதர்கள் திபெத் கண்காட்சியைப் பார்வையிடுதல்
cri
சீனாவிலுள்ள அமெரிக்கா, கனடா, சிலி, கம்போடியா முதலிய நாடுகளின் 100க்கு மேற்பட்டத் தூதர்களும் தூதாண்மை அதிகாரிகளும் நேற்று பெய்ஜிங்கில் திபெத்தின் இன்றும் நேற்றும் எனும் கண்காட்சியை பார்வையிட்டனர். கடந்த திங்கள் இறுதியில் துவங்கிய இக்கண்காட்சி, மிகப் பல பதிவேடுகள், ஆவணங்கள், தொல் பொருட்கள், படங்கள் முதலியவற்றின் மூலம் திபெத்தின் வரலாற்றை வெளிப்படுத்தியுள்ளது. கண்காட்சியில் வரலாற்றில் சீன நடுவண் அரசு திபெத்தில் மேற்கொண்ட ஆட்சி பற்றியும், 1959ம் ஆண்டுக்கு முந்தைய திபெத்தில் அரசியலையும் மதத்தையும் ஒன்றிணைக்கும் நிலப்பிரபுத்துவ பண்ணை அடிமை முறையின் பின்தங்கிய நிலைமை பற்றியும், இன்றைய திபெத் பெற்றுள்ள முன்னேற்றம் மற்றும் வளர்ச்சி பற்றியும் மக்களுக்கு எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. திபெத் விவகாரம் சீனாவின் உள் விவகாரமாகும் என்று கியூபா உறுதியாக கருதுவதாக கியூபத் தூதர் Carlos Miguel Pereira கூறினார். சீன அரசு சட்டப்படி திபெத் விவகாரத்தைக் கையாளும் அதிகாரத்துக்கு சர்வதேச மதிப்பு அளிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
|
|