பல்வேறு வழிமுறைகள் மூலம் சீனாவின் சிச்சுவான் மாநிலத்தின் நிலநடுக்கம் பற்றி சில நாடுகளின் தலைவர்கள் அண்மையில் சீன தலைவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தனர்.
பிரிட்டன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பாலஸ்தீனம், லிபியா, சிரியா, ஈராக் முதலிய நாடுகளின் தலைவர்கள் சீன அரசுத் தலைவர் ஹூசிந்தாவிடம் ஆறுதல் தெரிவித்தனர்.
பிலிப்பைன்ஸ், ஓமன், நமீபியா, ஹங்கேரி, மெக்சிகோ ஆகிய நாடுகளின் நாடாளுமன்ற தலைவர்கள் சீன தேசிய மக்கள் பேரவைத் தலைவர் வூ பாங்கோவிடம் ஆறுதல் தெரிவித்தனர்.
கிர்கிஸ்தான், அல்பேனியா, அயர்லாந்து, செக், ஸ்பெயின், டோங்கா போன்ற நாடுகளின் அரசுத் தலைவர்கள் சீனத் தலைமையமைச்சர் வென் சியா பாவிடம் ஆறுதல் தெரிவித்தனர்.
|