சீனாவின் சிச்சுவான் மாநிலத்தின் wenchuan மாவட்டத்தில் 12ம் நாள் ரிக்டர் அளவையில் 7.8 என பதிவான நிலநடுக்கம் ஏற்பட்ட பின், வெளிநாடு வாழ் சீன மக்கள், வெளிநாடுகளிலுள்ள சீனாவின் நிறுவனங்கள், தூதரகங்கள் மற்றும் வெளிநாடுகளிலுள்ள சீன மாணவர்கள் ஆகியோர் தொடர்ந்து நன்கொடை வழங்கி, நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் இன்னலை சமாளிப்பதற்கு உதவி செய்து வருகின்றனர்.
அண்மையில், ரஷ்யா, இத்தாலி, ஹங்கேரி, பிலிப்பைன்ஸ், பிரேசில், சிலி, மலேசியா ஆகிய நாடுகளில் வாழும் சீனர்கள் அல்லது சீன நிறுவனங்கள் பல்வேறு வழிமுறைகள் மூலம் சிச்சுவான் மாநிலத்தின் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசத்துக்கு நன்கொடை வழங்கியுள்ளனர்.
ஆஸ்திரேலிய தலைநகர் கான்பெராவில் வாழும் சீனர்கள் திரட்டிய முதல் தொகுதி 56 ஆயிரம் யுவான் நன்கொடை 15ம் நாள் பிற்பகல், அந்நாட்டிலுள்ள சீனத் தூதரகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
14ம் நாள், அமெரிக்க நியூயார்க், சிக்காகோ முதலிய பிரதேசத்தில் வாழும் சீன மாணவர்களும், மக்களும் பல நன்கொடை நடவடிக்கைகளை மேற்கொண்டனர். மியன்மார், வியட்நாம், ரஷ்யா, சிரியா, பிரேசில் ஆகிய நாடுகளிலுள்ள சீனத் தூதரகங்கள் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டோருக்கு ஆறுதல் தெரிவித்து, நன்கொடை வழங்கியுள்ளன என்று தெரிகிறது.
|