சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளரும், சீன அரசுத் தலைவரும், மத்திய இராணுவ ஆணையத்தின் தலைவருமான ஹூசிந்தாவ் இன்று முற்பகல் விமானம் மூலம் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட சிச்சுவான் மாநிலம் சென்றடைந்தார். அப்பிரதேசத்திலுள்ள ஊழியர்கள், பொது மக்கள் ஆகியோருக்கு ஆறுதல் தெரிவித்து, நிலநடுக்கப் பேரிடர் மீட்புப் பணியின் முன்னணியில் ஈடுபடும் படை அதிகாரிகள், போர்வீரர்கள், காவற்துறையினர்கள், மருத்துவ ஊழியர்கள் ஆகியோரைச் சந்தித்து, நிலநடுக்கப் பேரிடர் மீட்புப் பணிக்கு அவர் வழிகாட்டினார்.
தற்போது, நிலநடுக்கப் பேரிடர் மீட்புப் பணி மிக முக்கிய தருணத்தில் நுழைந்துள்ளது. இன்னல்களை எல்லா வழிமுறைகளிலும் காலதாமதமின்றி சமாளித்து, இப்பணியை வெற்றிகரமாக நிறைவேற்ற பாடுபட வேண்டும் என்று ஹூசிந்தாவ் வலியுறுத்தினார்.
இது வரை, 72 மணி நேரம் என்ற சிறந்த மீட்புதவிக் கால அவகாசத்தை கடந்த போதிலும், பொது மக்களின் உயிரை பாதுகாப்பது என்பது மிக முக்கியமானது. அதேவேளையில், மருத்துவச் சிகிச்சைகளை காயமுற்றோர் உடனடியாகப் பெற வேண்டும். போக்குவரத்து, தொலைத்தொடர்பு, மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை இயன்ற அளவில் சீரமைக்க வேண்டும். பொது மக்களின் அடிப்படை வாழ்க்கை பிரச்சினை தீர்க்க வேண்டும் என்று ஹூசிந்தாவ் கூறினார்.
|