நிவாரணப் பொருட்கள் கொண்ட பாகிஸ்தானின் இரண்டு c-130 ரக 2 போக்குவரத்து விமானங்கள் இன்று காலை 7 மணிக்கு rawlpindi இன் chaklala விமானப் படைத் தளத்திலிருந்து, சீனாவின் சிச்சுவான் மாநிலத்தின் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசத்துக்குப் புறப்பட்டுச் சென்றது.
பாகிஸ்தான் போதைப் பொருட்கள் தடுப்பு அமைச்சர் nazar Muhammad gondal, தேசிய பேரழிவு நிர்வாக ஆணையத்தின் தலைவர் farooq ahmed khan, பாகிஸ்தானிலுள்ள சீனத் தூதர் luozhaohui ஆகியோர் விமான நிலையத்துக்குச் சென்று இந்த விமானங்களை வழியனுப்பினர்.
300 கூடாரங்கள், 500 கம்பளிப் போர்வைகள், 3 டன் குடிநீர், 4 டன் மருந்துகள், ஆயிரம் நெகிழி பாய்விரிப்புகள் ஆகியவை இதில் அடங்கும். மொத்தம் 23 டன் எடை கொண்ட பொருட்கள், சீனாவுக்கு பாகிஸ்தான் வழங்கிய முதலாவது தொகுதி நிவாரணப் பொருட்களாகும் என்று தெரிகிறது.
|