• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-05-16 11:08:03    
சீனாவின் கடும் நிலநடுக்கம்

cri
சீனாவின் சி ச்சுவான் மாநிலத்தின் வென் சுவான் மாவட்டத்தில் ரிக்டர் அளவையில் 7.8 என்று பதிவான கடும் நிலநடுக்கம் நிகழ்ந்த பின், உலகின் பல்வேறு இடங்களிலிருந்து சீன வானொலி நிலையத்தின் நேயர்கள், கடிதம், தொலைநகல், மின்னஞ்சல் ஆகியவற்றின் மூலம் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதலையும் அனுதாபங்களையும் தெரிவித்தனர். நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்கள், பேரிடரை உறுதியாகவும் துணிவாகவும் எதிர்கொள்ள வேண்டும் என்று வெளிநாட்டு நேயர்கள் விருப்பம் தெரிவித்தனர்.  அதே வேளையில், சர்வதேசச் சமூகம், சீனாவுக்கு உதவிக்கரம் நீட்ட வேண்டும் என்று அவர்கள் வேண்டுகோள் விடுத்தனர். இந்த நிலநடுக்கம், பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி வெற்றிகரமாக நடைபெறுவதைப் பாதிக்காது என்று அவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.
நிலநடுக்கப் பேரிடர், பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியைப் பாதிக்காது. இப்போட்டி, வெற்றிகரமாக நடைபெறுவது உறுதி என்று இத்தாலி, பிரேசில், பாகிஸ்தான், நைஜீரியா, ஐக்கிய அரபு எமிரேட்டுகள், ஆப்கானின் தான், தாய்லாந்து, ஜெர்மனி, நைஜர், ஹங்கேரி, வியட்நாம், லத்வியா, இந்தியா முதலிய நாடுகளின் நேயர்கள் கூறினர். தமக்குத் தாமே உதவிக்கொள்பவருக்குக் கடவுளும் உதவுவார் என்று இந்திய நேயர் chunni lal kaivart தனது மின்னஞ்சலில் கூறினார். சீனாவால் இந்த இயற்கை சீற்றத்தைத் தோற்கடிக்க முடியும் பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் ஒரே உலகம், ஒரே கனவு என்ற முழக்கம் நிறைவேறுவது உறுதி என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.