ஜப்பானிய அரசு அனுப்பிய 31 சிறப்புத் துறை மீட்புதவிப் பணியாளர்கள், இன்று காலை 3 மணிக்கு சிச்சுவான் மாநிலத்தின் chengduஐ வந்தடைந்ததும், guanzhuang மாவட்டத்துக்கு சென்று மீட்புதவிகளை மேற்கொள்ளத் தொடங்கினர். திட்டப்படி, ஜப்பானின் மேலும் 29 மீட்புதவிப் பணியாளர்கள், இன்று மாலை chengduஐ வந்து அடைவார்கள். வெளிநாட்டு சிறப்புத் துறை மீட்புதவியாளர்கள் சீனாவின் மீட்புப் பணியில் கலந்து கொள்வது, சீன வரலாற்றில் இதுவே முதன்முறையாகும். ஜப்பானிய மீட்புதவிப் பணியாளர்களைத் தவிர, ரஷியா, தென்கொரியா, சிங்கப்பூர் ஆகிய மூன்று நாடுகள் சீனாவுக்கு மீட்புதவிப் பணியாளர்களை அனுப்புவதை, சீன அரசு ஏற்றுக்கொண்டுள்ளது. சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் qingang இன்று, இதைத் தெரிவித்தார்.
|