கேர்கெச்சி இன மக்கள், தங்களை "கேர்கெச்சி" என அழைக்கின்றனர். இப்பெயர், 40 பழங்குடிகள், 40 இளம் பெண்கள், மலையிலான ஆயர்கள் முதலிய பொருள்களைக் கொண்டுள்ளது. கேர்கெச்சி இன மக்கள் பெரும்பாலானோர், சிங்கியாங்கின் தென் பகுதியின் kezile கேர்கெச்சி இனத் தன்னாட்சி சோவில் வாழ்கின்றனர். ஏனையோர் wushi, akesu, shadong முதலிய இடங்களில் வசிக்கின்றனர். இதன் மொத்த மக்கள் தொகை, ஒரு இலட்சத்து 40 ஆயிரமாகும்.

கேர்கெச்சி மொழி, Altic மொழி குடும்பத்தின் tu jue கிளையைச் சேர்ந்தது. முன்பு, அரபு எழுத்துக்களைப் பயன்படுத்தினர். நவ சீனா நிறுவப்பட்ட பின், இலத்தீன் எழுத்துக்களின் அடிப்படையில் புதிய எழுத்துக்களை உருவாக்கினர். கேர்கெச்சி இன மக்கள், இஸ்லாம் மத நம்பிக்கை கொண்டவர்கள். சிலர் lama மதத்தையும் நம்புகின்றனர். கேர்கெச்சி இன மக்கள், முக்கியமாக கால்நடைகளை வளர்க்கின்றனர். வேளாண்மையிலும் கால்நடை உற்பத்திப் பொருட்களின் பதனீட்டு தொழிலிலும் ஈடுபடுகின்றனர். அவர்கள் அலைந்து திரியு்ம் மேய்ச்சல் நிலத்தை கண்டுப்புக்கும் நாடோடி வாழ்க்கை நடத்துகின்றனர். பால் அருந்தவும், ஆடு, மாடு, குதிரை ஆகிய விலங்குகளின் இறைச்சியை உண்ணவும் விரும்புகின்றனர். கேர்கெச்சி இன மக்கள், சிவப்பு நிறத்தை மிகவும் விரும்புகின்றனர்.

அவர்களுடைய ஆடை, தொப்பி, கைவினைப் பொருட்கள் முதலியவற்றில் பல, சிவப்பு நிறமானவை. nuoruozi விழா, கேர்கெச்சி இன மக்களின் மிக பிரமாண்டமான விழாவாகும். ஒவ்வொரு ஆண்டின் முதல் நாள், nuoruozi விழாவாகும். இது, ஹன் இன மக்களின் வசந்த விழாவைப் போல் இருக்கிறது. கேர்கெச்சி இன மக்கள், விருந்தோம்பல் பண்பு அதிகமுடையவர்கள். விருந்தினர் வந்தால், சுவையான உணவுகளை சமைத்து அவருக்கு உளமார்ந்த விருந்து அளிக்கிறார்கள். குறிப்பாக, ஆட்டு தலை இறைச்சியை, விருந்தினர்களுக்கு பரிமாறினால் மிக அதிக மதிப்பை வெளிப்படுத்துவதாக பொருள்படுகிறது.

|