
Shangrila, தென்மேற்குச் சீனாவிலுள்ள Yun nan மாநிலத்தின் Di qing திபெத் இனத் தன்னாட்சிச் சோவில் உள்ளது. திபெத், Li su, Na xi, Bai, Yi முதலிய 25 சிறுபான்மைத் தேசிய இனத்தவர்கள், அங்கு வாழ்ந்து வருகின்றனர். Di qing திபெத் இனத் தன்னாட்சிச் சோவின் தலைநகரான Shangrilaவின் வீதியில் நடைபோடும் போது, சிறுபான்மைத் தேசிய இனங்களின் எழில் மிக்க நடையுடை பாவனைகளால், கவரப்படுவீர்கள்.
நீங்கள் இப்பொழுது கேட்டுக் கொண்டிருப்பது, திபெத் இனப் பாடலாகும். Shangrilaவிலுள்ள மிக புகழ்பெற்ற நாட்டுப்புறப் பாடகி A Mu, இதைப் பாடியுள்ளார். அவருக்கு வயது, 60க்கு மேலாகும். ஆனால், அவர் மிகவும் இளமையாக தோற்றமளிக்கிறார். குறிப்பாக பாட்டு பாடும் போது, அதிக உற்சாகம் மிகுந்தவராகக் காணப்படுகிறார். அவர் பள்ளிக் கல்வி பயின்ற காலம் குறைவாக இருந்த போதிலும், திபெத் இனத்தின் மலை மற்றும் நாட்டுப்புறப் பாடல்களை, திறமையாக பாடுகிறார். அவர் கூறியதாவது,

நான், என் வாழ் நாள் முழுவதும் பாட்டு பாடி வருகிறேன். குழந்தையாக இருந்த போது, மலையில், விறகு வெட்டும் போது, பாட்டு பாடுவேன். திபெத் இனத்தவர்கள், பாடல் இயற்றுவதில் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்றார் அவர்.
தற்போது, A Mu, Shangrila நகரில் வாழ்ந்து வருகின்றார். அழைப்புக்கிணங்க அடிக்கடி வெளி ஊர்களிலிருந்து வந்த விருந்தினர்களுக்காக திபெத் இனப் பாடல்களைப் பாடி வருகிறார். ஒவ்வொரு முறையும், அவர் நேயர்களால் உற்சாகமாக வரவேற்கப்படுகின்றார். அங்கு, சில இளைஞர்களால் உருவாக்கப்பட்ட Shangrila குழு இருக்கிறது. அவர்களது நாட்டுப்புறப் பாடல்களை, பலர் விரும்புகின்றனர். 2006ம் ஆண்டு, அவர்கள், சீன இளைஞர் பாடகர் போட்டியில் வெள்ளி பதக்கம் பெற்றனர்.
பேசத் தெரியுமானால், பாட்டு பாடத் தெரியும். நடந்து செல்லத் தெரியுமானால், ஆடத் தெரியும் என்ற கூற்று, உள்ளூர் மக்களிடையில் பரவியுள்ளது. சிறுபான்மைத் தேசிய இன மக்களின் வாழ்க்கையில், ஆடல் பாடல் என்பது தவிர்க்க முடியாத பங்கு வகிக்கின்றது.

Shangrila மாவட்ட நகரில், நாள்தோறும், இரவில், சிறியதும் பெரியதுமான சதுக்கங்களில், மக்கள் நிறைந்து காணப்பட்டுள்ளனர். அவர்கள் இசையுடன், மகிழ்ச்சியாக நடனமாடுகின்றனர். இந்த பொது மக்கள் நடனங்கள், ஒரு புறம், சிறுபான்மைத் தேசிய இன மக்களின் தனிச்சிறப்பியல்புகளைக் காட்டுகின்றன. மறு புறம், Di qing திபெத் இனத் தன்னாட்சிச் சோவின் அரசின் பெரும் ஆதரவைக் காட்டுகின்றன. திபெத் இனத்தவரான Di qing பண்பாட்டுப் பணியகத்தின் தலைவர் Pu Jiang அறிமுகப்படுத்தியதாவது,
இப்பொழுது, நீங்கள் காண்கின்ற சதுக்க நடனங்கள், பண்பாட்டு மையத்தால் பொது மக்களிடமிருந்து திரட்டப்பட்டு, ஒழுங்குபடுத்தப்பட்ட பின், பரவலாக்கப்பட்டுள்ளன. இந்த சதுக்க நடனங்கள், Di qing பண்பாட்டு வாழ்க்கையின் தனிச்சிறப்பியல்பாக மாறியுள்ளன என்றார் அவர்.

Shangrilaவில், பல்வேறு தேசிய இன ஆடைகள் அணியும் சிறுபான்மைத் தேசிய இன மக்களை எப்போதும் பார்க்கலாம். அங்குள்ள பொருளாதாரத்தின் வளர்ச்சியுடன், மக்களின் வாழ்க்கை, மென்மேலும் சிறப்பாக மாறியுள்ளது. பல்வேறு தேசிய இன மக்களின் ஆடைகளும், மென்மேலும் பயனுடையதாகவும், ஆழகாகவும் மாறியுள்ளன. Di qingஇலுள்ள De qing மாவட்டத்தின் தேசிய இன ஆடல் பாடல் குழுவின் தலைவர் Zhaxi suonanpinchu, திபெத் இனத்தவராக இருக்கிறார். 20 ஆண்டுகளுக்கு மேலாக, அவர் தேசிய இன ஆடை பற்றிய பணியில் ஈடுபட்டு வருகிறார். அவர் கூறியதாவது,
முன்பு, எங்கள் ஆடைகள், தாழ்ந்த தர நிலையில் இருந்தன. தற்போது, அவை உயர் தர நிலையில் இருக்கின்றன. இப்பொழுது, நாங்கள் அணியும் ஆடைகள், விழா கொண்டாட்டத்தின் போது அணியும் ஆடைகளாகும். சாதாரண நாட்களில் எளிய ஆடைகளை அணிகிறோம் என்றார் அவர்.

உண்மையான தேசிய இன ஆடைகள், நேர்த்தியான துணி மற்றும் விலங்குகளின் தோல்களால் மட்டுமல்ல, அழகான அலங்காரப் பொருட்களாலும் தயாரிக்கப்பட வேண்டும். வண்ண அழகிய மணி கற்கள், பவளம் முதலியவை, Di qingஇலுள்ள சிறுபான்மைத் தேசிய இன மக்களால் விரும்பப்படும் அலங்காரப் பொருட்களாகும். தவிர, கைவினை வெள்ளி அலங்காரப் பொருட்களையும், மக்கள் விரும்புகின்றனர்.
முன்பு, அங்குள்ள திபெத் இனத்தவர்களின் ஆடைகளும் அலங்காரப் பொருட்களும், அவர்களாலேயே தயாரிக்கப்பட்டன. ஆடைகளின் அலங்காரப் பொருட்களை தயாரிக்கும் கைவினைத் தொழில், உள்ளூர் மக்களின் ஒரு பாரம்பரிய தொழிலாக மாறியுள்ளது. தற்போது, இந்தக் கைவினை தொழிலாளர்கள் தயாரித்த ஆடைகளையும் வெள்ளி அலங்காரப் பொருட்களையும் அவர்கள், தாமாகவே அணிவது மட்டுமல்ல, பயணியர்களின் வரவேற்பையும் பெற்றுள்ளன.
Shangrila மாவட்டத்தின் ஒரு பழங்கால நகரில், பல தேசிய இனத் தனிச்சிறப்பு வாய்ந்த கடைகள் இருக்கின்றன. அங்கு, Kang ba என்ற வெள்ளி அலங்காரப் பொருட்களை விற்பனை செய்யும் கடை ஒன்று இருக்கிறது. அதன் உரிமையாளர் இளம் பெண் Zhuoma கூறியதாவது,

இந்தக் கைவினைத் தொழில், தலைமுறை தலைமுறையாக, செய்யப்பட்டு வருகின்றன. கடையில் விற்பனை செய்யும் வெள்ளி அலங்காரப் பொருட்கள் எல்லாம், எங்களால் தாமாகவே தயாரிக்கப்பட்டுள்ளன. இதனால் கிடைக்கும் ஆண்டு வருமானம், சுமார் 50 ஆயிரம் யுவானாகும் என்றார் அவர்.
இந்தப் பழங்கால நகரில், பல்வகை திபெத் வெள்ளி நகைகள், யாக் எருது தோல் மற்றும் எலும்புகளால் தயாரிக்கப்படும் பொருட்கள் முதலிய கைவினைப் பொருட்கள் விற்பனையாகின்றன. தற்போது, உள்ளூர் கைவினைப் பொருட்கள், சிறுபான்மைத் தேசிய இன மக்களின் வருமானத்தை அதிகரிப்பதோடு, Shangrilaவின் சிறுபான்மைத் தேசிய இன மக்களின் பண்பாட்டையும் புரிந்து கொள்ளும் வழியாகவும் மாறியுள்ளது.
|