• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-05-16 09:07:20    
திபெத் இன பாடகி Han Hong

cri

திபெத் இன பாடகி Han Hong திபெத்தில் உள்ள Shigatse நகரில் பிறந்தார். அவரது தந்தை, திபெத்தின் வளர்ச்சியை விரைவுபடுத்த அங்குள்ள படையில் நகைச்சுவை உரையாடலாளராக வேலை செய்தார். அவரது தாய் Yong Xi அம்மையார், புகழ் பெற்ற திபெத் இன பாடகி ஆவார். "பெய்சிங்கின் பொன் மலையில்" என்ற பாடலால், Yong Xi அம்மையார் சீனா முழுவதும் பிரபலமானார்.
சிறு வயதிலிருந்தே Han Hong பாடல்கள் பாடுவதை நேசித்தார். தமது தாயிடமிருந்து இசை அறிவை கற்றுக்கொண்டார். தந்தையும் அவரை கவனமாக பராமரித்தார். குழந்தை பருவத்தில் Han Hong கவலையின்றி வாழ்ந்து வந்தார்.
ஆனால், 1976ஆம் ஆண்டு, அவரது தந்தை நோய்வாய்பட்டு காலமானார்.
எனவே Han Hongக்கு 9 வயதான போது, அவர் பெய்சிங்கில் உள்ள பாட்டி வீட்டுக்கு அனுப்பப்பட்டார். பாட்டி ஐஸ் விற்பனை செய்ததன் மூலம் வாழ்க்கை நடத்தி, Han Hongஐ வளர்த்தார்.

Han Hong 16 வயதான போது, படையில் சேர்க்கப்பட்டு, செய்தி தொடர்பில் ஈடுபடும் படைவீரர்களில் ஒருவராக மாறினார். பத்து ஆண்டுகளுக்கு மேலாக அவர் இப்பணியில் ஈடுபட்டார்.
ஆனால், Han Hongவின் மனதில், இசை மீதான ஆசை நிரம்பி இருந்தது. எனவே படையின் ஓய்வு நேர பாடல் அணியில் அவர் சேர்ந்தார். ஓய்வு நேரத்தில் அவர் கித்தார் இசைப்பதையும் கற்றுக் கொண்டு, பாடல்களைப் பாட பயின்றார். 1988ஆம் ஆண்டு, சீன மத்திய இசை கல்லூயில் சேர்ந்து, ஓராண்டுகாலம் பேராசிரியர் Zou Wen Qin அம்மையாரிடம் பயிற்சி பெற்று பாடுவதை முறையாக கற்றுக்கொண்டார். அக்காலத்தில், Yugoslaviaவின் Belgrade இசை விழாவில் அவர் பங்கெடுத்து, பாப் பாடல் போட்டியில் மூன்றாவது பரிசு பெற்றார். அதனால் அவரது நம்பிக்கை அதிகரித்தது. தனது படிப்பை முடித்த பின், டையின் கலைக் குழுவில் சேர்ந்து, பாடகியாக மாற அவர் விரும்பினார். ஆனால், அவரது விருப்பம் நனவாகவில்லை.
அதற்கு பின்னரும், பாடகியாக மாறுவதிலான தனது நம்பிக்கையிலிருந்து அவர் தளரவில்லை. பல்வேறு பாடல் போட்டிகளில் அவர் கலந்து கொண்டார்.

சில ஆண்டுகள் அவர் இம்முயற்சியை மேற்கொண்டார். ஆனால் பல்வகை போட்டிகளில் அவர் தோல்வியே அடைந்தார். ஆனாலும் அவரது பாட்டி எப்போதும் போல் அவருக்கு ஆதரவளித்து, பாடகியாக மாறும் கனவை நனவாக்க தொடர்ந்து பாடுபடுமாறு அவரை ஊக்குவித்தார். Han Hongக்கு உதவி செய்யும் பொருட்டு, பாட்டி பல்வகை இசை தரவுகளைத் திரட்டினார். Han Hongவின் சித்தப்பா, அவரது சேமிப்பு பணத்தை செலவிட்டு, பியானோ ஒன்றை வாங்கி, அவருக்கு வழங்கினார்.
அந்த பியானோவைப் பயன்படுத்தி, "காற்று மற்றும் மழையில் வெளிபடுத்தப்படும் அழகு", "இமய மலை" உள்ளிட்ட சில பாடல்களை அவர் இயற்றினார். இப்பாடல்களில், Han Hong தமது குடும்பத்தினர் மீது கொண்டிருக்கும் ஆழமான அன்பு வெளிப்படுத்தப்படுகின்றது.
1995ஆம் ஆண்டு, Han Hongஐப் பொறுத்த வரை சிறப்பு மிக்க ஓர் ஆண்டாகும். தேர்வு மூலம் விடுதலை படை கலைக் கல்லூரியின் இசை துறையில் அவர் சேர்ந்து, புகழ்

பெற்ற பாடகர் Li Shuang Jiangயிடமிருந்து பாடல் பயிற்சி பெற்று கற்றுக்கொண்டார். அப்போது சீனாவில் இசையை ஒளிபரப்பும் MTV வளர்ந்திருந்தது. அவ்வாண்டு திபெத்தில் "இமய மலை" என்னும் MTV படைப்பை Han Hong வழங்கும் வாய்ப்பு கிடைத்தது.
இசைத் தொலைக்காட்சி படைப்பு எடுப்பதற்கு அதிக பணம் தேவைப்பட்டது. ஆனால் அப்போது Han Hongவிடம் பணம் இல்லை. இசை தொலைக்காட்சி படைப்பு எடுப்பது என்பது, Han Hongவின் பாடகியாகும் இலட்சியத்துக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்று அவர் பாட்டி புரிந்து கொண்டார். Han Hongவுக்கு உதவி செய்ய, அவர் பணம் சேமிக்கத் துவங்கினார். தமது ஓய்வு ஊதியம் அனைத்தையும் சேமித்தும், ஐஸ் விற்பனை செய்தும் பணம் திரட்டினார். இறுதியில் பாட்டி 30 ஆயிரம் யுவானை Han Hongக்கு வழங்கினார். MTV நிகழ்ச்சி எடுக்கப்பட்டப் பின், சீன மத்திய தொலைக்காட்சி நிலையத்தில் ஒளிபரப்பப்பட்டது. பின்னர் MTV நடத்திய போட்டியில் அப்படைப்பு வெண்கல பரிசு பெற்றது.
1997ஆம் ஆண்டு, சளையாத முயற்சியுடன், "பனி பிரதேசத்தின் சூரியன் ஒளி" என்னும் ஒலிநாடாவை Hang Hong வெளியிட்டார். அவர் வெளியிட்ட முதலாவது ஒலிநாடாவான அது, மக்களால் மிகவும் வரவேற்கப்படுகிறது.

தாம் 9 வயதாக இருந்த போது முதல், Han Hong பெய்சிங்கில் பாட்டியுடன் வாழ்ந்து வந்தாலும், அவர் தாய் Yong Xi, அவர் மீதான அக்கறையை நிறுத்தவில்லை. அவர் தொலைபேசி மூலம் Han Hongஉடன் அடிக்கடி தொடர்பு கொண்டு உரையாடுகின்றார். பாடல் பாடுவது தொடர்பான கருத்துக்களை தாயும் மகளும் அடிக்கடி தொலைபேசி மூலம் பரிமாறிக் கொள்கின்றனர். Han Hong பாடகியாகி பெற்றுள்ள வெற்றிகள், அவரது தாயிடமிருந்து பிரித்து பேசப்பட முடியாதது. தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட Han Hongவின் நிகழ்ச்சிகளை தாய் கவனமாக பார்த்து கவனித்து வருகிறார்.
2001ஆம் ஆண்டு ஜுலை 3ஆம் நாள், Hang Zhou நகரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், "பெய்சிங்கின் பொன் மலையில்"என்ற பாடலை Han Hongஉம் அவரது தாயும் இணைந்து பாடினர். அப்பாடல், தனது தாயின் படைப்பாகும் என்று Han Hong கூறினார்.