• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-05-16 09:10:34    
பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு செய்தி

cri
சீனாவின் கிழக்கு பகுதியிலுள்ள சின் தாவ் நகரில் நடைபெற்ற சர்வேதச வள்ள ஓட்ட கூட்டமைப்பு கூட்டத்தில் கலந்துகொண்ட சர்வதேச வள்ள ஓட்ட கூட்டமைப்பின் பிரதிநிதிகள் 11ம் நாள் சின் தாவ் ஒலிம்பிக் வள்ள ஓட்ட மையத்தை பார்வையிட்டி, பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டியின் வள்ள ஓட்டத்துக்கான ஆயத்த பணிகளை வெகுவாக பாராட்டியுள்ளனர்.
சின் தாவ் ஒலிம்பிக் வள்ள ஓட்ட போட்டிக்கான ஆயத்த பணிகள் சுமுகமாக நடைபெற்றது. பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டியின் வள்ள ஓட்ட போட்டி வெற்றிகரமாக நடைபெறும் என்று சர்வேதச வள்ள ஓட்ட கூட்டமைப்பின் தலைவர் Petersson பரணமாக நம்புகின்றார்.

2008ம் ஆண்டு பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி வெற்றி பெறுவது உறுதி. சிலி அரசு செயலகத்தின் விளையாட்டு விவகார ஆணையத்தின் துணைத் தலைவர் Pizarro Santiago நகரில் சீன செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது, இவ்வாறு தெரிவித்தார்.
ஒலிம்பிக் விளையாட்டு போட்டி, உலக மக்களை ஊக்குவித்து, அவர்களுக்கு உயிராற்றல் தரும். பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டி வெற்றி பெறுவது உறுதி என்று Pizarro முழுமையாக நம்புகின்றார். பெய்சிங் ஒலிம்பிக் வெற்றிகரமாக நடைபெறுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ள சிலி அரசு விரும்புவதாகவும் அவர் கூறினார்.

2004ம் ஆண்டு ஏதென்ஸ் ஒலிம்பிக் விளையாட்டு போட்டியில், சிலி 2 தங்கம் மற்றும் 1 வெண்கல பதக்கங்களை பெற்றது. தென் அமெரிக்க நாடுகளில், இது மூன்றாவது இடம் வகித்து, பிரேசில் மற்றும் அர்ஜென்டீனாவுக்கு அடுத்த இடத்தில் இருந்தது. பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டியில், முந்திய ஒலிம்பிக் சாதனையைத் தாண்டுவது சிலியின் முக்கிய இலக்காகும் என்று Pizarro கூறினார்.

உலகின் மிக உயரமான ஜொல்மோ லுங்மா சிகரத்தின் உச்சியிலான ஒலிம்பிக் தீபத் தொடரோட்ட நடவடிக்கையை சீனா வெற்றிகரமாக நனவாக்கியது. ஆனால், இந்த பெரும் ஒலிம்பிக் விளையாட்டுக்குரியது. மேலும் விரைவாக, உயர்வாக மற்றும் வன்மையாக என்பது ஒலிம்பிக் விளையாட்டு போட்டியின் இலக்காகும். ஜொல்மோ லுங்மா சிகரத்தின் உச்சியை ஒலிம்பிக் தீபம் வெற்றிகரமாக அடைந்தமை, இவ்விலக்கை உயிர்த்துடிப்புடன் உள்ளது உள்ளபடியே எடுத்துக்காட்டியது.

மே 8ம் நாள், ஜொல்மோ லுங்மா சிகரத்தின் உச்சியில் ஒலிம்பிக் விளையாட்டு போட்டியின் தீபத் தொடரோட்ட நடவடிக்கை என்ற தனது வாக்குறுதியை சீனா நிறைவேற்றியது. ஆகஸ்டு 8ம் நாள், வாக்குறுதியின் படி, உயர் நிலை ஒலிம்பிக் விளையாட்டு போட்டியை நடத்த சீனா பாடுபடும் என்று நாம் முழுமையாக நம்புகின்றோம்.
இந்தியா, சிங்கப்பூர், நேபாளம், ரஷியா, தென் கொரியா, ஆஸ்திரேலியா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளின் முக்கிய செய்தி ஊடகங்கள் ஒலிம்பிக் தீபம் ஜொல்மோ லுங்மா சிகரத்தின் உச்சியை அடைந்த செய்தியை வெளியிட்டன.