• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-05-16 16:01:28    
சர்வதேசச் சமூகத்தின் உதவி

cri

சிச்சுவான் மாநிலத்தின் வென்சுவான் மாவட்டத்தில் ரிச்டர் அளவையில் 7.8 பதிவான கடும் நில நடுக்கம் நிகழ்ந்த பிறகு, சர்வதேசச் சமூகம் கடந்த சில நாட்களில் பாதிக்கப்பட்ட சீனப் பிரதேசங்களுக்கு நன்கொடைத்தொகையும் பொருட்களையும் வழங்கி, பேரிடர் நீக்க மீட்புதவிப்பணிக்கான சீன அரசு மற்றும் மக்களின் முயற்சியை ஆதரித்து வருகிறது.

ஜப்பானின் 31 சிறப்பு மீட்புதவிப்பணியாளர்கள் இன்று காலை நிலநடுக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட குவான் யுன் நகரத்தின் சிங் சுவான் மாவட்டத்தைச் சேர்ந்த குவான் சுவாங் வட்டத்தைச் சென்றடைந்துள்ளனர். சிச்சுவான் மாநிலத்தில் மீட்புதவி நடவடிக்கைகளில் பங்கெடுக்கும் முதலாவது வெளிநாட்டு அணி, இதுவாகும்.
ரஷியா, தென்கொரியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளின் மீட்புதவி அணிகள் இன்று பிற்பகல் அடுத்தடுத்து செந்து நகரத்தைச் சென்றடையும்.

இன்று காலை, பாகிஸ்தானின் இரண்டு விமானங்கள், மீட்புதவிப் பொருட்களைக் கொண்டு, ராவல்பிண்டியிலிருந்து புறப்பட்டு, சிச்சுவான் மாநிலத்தைச் சென்றன.

மீட்பு நடவடிக்கைகளுக்கு உதவி அளிக்க, சீனச் செஞ்சிலுவை சங்கத்துக்கு ஒரு கோடி அமெரிக்க டாலர் தொகை நன்கொடையை வழங்கும் என்று, அமெரிக்க செஞ்சிலுவை சங்கம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் அறிவித்தது.ஐ.நாவின் குழந்தைகள் நிதியம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், சீனாவுக்கு ஒரு தொகுதி மீட்புதவிப் பொருட்களை அனுப்பும் என்றும், அவை, 48 மணி நேரத்துக்குள் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை வந்தடையும் என்றும் கூறியுள்ளது.