• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-05-16 18:36:35    
மீட்புதவிப்பணி செவ்வனே தொடர்ந்து வருகிறது

cri

சிச்சுவானின் வென்சுவானில் நிகழ்ந்த கடும் நிலநடுக்கத்தில், முழு சீனாவின் ஒட்டுமொத்த ஆற்றலையும் பயன்படுத்தி, மனிதரைக் காப்பாற்றுவதை முக்கியமாக கொண்டு, இன்னலை நீக்கி, மீட்புதவிப்பணியை உறுதியாக செய்ய வேண்டும் என்று சீனத் தலைமையமைச்சர் வென்சியாபாவ் தெரிவித்தார்.

மே 16ம் நாள் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த போது அவர் இவ்வாறு கூறினார். நிலநடுக்கம் நிகழ்ந்த பின், சீன அரசு, ஒரு லட்சத்துக்கு கூடுதலான மீட்புதவிப்பணியாளர்களை, பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு அனுப்பியுள்ளது. இதுவரை, பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களையும் அவர்கள் சென்றடைந்துள்ளனர்.

காயமுற்றனர்களையும், சிறப்பு மீட்புதவிப்பணியாளர்கள், அவசர தேவைக்கான மீட்புதவி பொருட்கள் ஆகியவற்றையும் ஏற்றிச்செல்ல, சீனா, நூற்றுக்கு அதிகமான ஹெலிகாப்டர்களை பயன்படுத்தியுள்ளது. வாய்ப்பு இருந்தால், முழு மூச்சுடன் பாடுபட வேண்டும் என்றும் வென்சியாபாவ் குறிப்பிட்டார்.

நிலநடுக்க நிகழ்ந்த 5 நாட்களில், கடுமையாக பாதிக்கப்பட்ட அனைத்து பிரதேசங்களையும் வென்சியாபாவ் சென்றுப் பார்வையிட்டார்.

மே திங்கள் 16ம் நாள் பிற்பகல் 4 மணி வரை, வென்சுவான் நிலநடுக்கத்தில் 21,500 பேர் உயிரிழந்தனர். ஒரு லட்சத்து 59 ஆயிரம் பேர் காயமுற்றனர். தற்போது, பல்வேறு மீட்புதவிப்பணி தொடர்ந்து ஒழுங்காக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.