• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-05-16 19:45:09    
ஹுசிந்தாவ் மீட்புதவிப்பணியைப் பார்வையிட்டார்

cri

சீன அரசுத் தலைவர் ஹுசிந்தாவ் இன்று நண்பகல் சிச்சுவான் மாநிலத்தில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசத்தைச் சென்றடைந்து, தலைமையமைச்சர் வென்சியாபாவ் மற்றும் இதர தலைவர்களுடன் கூட்டத்தை நடத்தி, மீட்புதவிப்பணிகளை கூட்டாக ஆராய்ந்து பரவல் செய்தார்.

இந்நிலநடுக்கத்தின் தனிச்சிறப்பியல்பு, இழப்பு நிலைமை, மீட்புதவிப்பணியின் போக்கு, தற்போது நிலவும் இன்னல்கள், அடுத்தக் கட்டப் பணியின் முக்கிய அம்சங்கள் ஆகியவற்றை வென்சியாபாவ் அறிவித்தார்.

இப்பொழுது, நேரம் குறைவாக உள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட இழப்பு, மிகவும் தாழ்ந்த அளவுக்குக் குறைக்க பாடுபட வேண்டும். மனிதரைக் காப்பாற்றுவதற்கு முழுமூச்சுடன் முயற்சி செய்ய வேண்டும் என்று இக்கூட்டம் வலியுறுத்தியது.

காப்பாற்றப்பட்ட பொது மக்களை காலதாமதமின்றி குடியமர்த்தி, இதர நிலநடுக்கத்துக்கான தடுப்பை வலுப்படுத்தி, புதிய உயிரிழப்புகளைத் தவிர்த்து, சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புப்பணியை உணர்வுப்பூர்வமாக மேற்கொள்ள வேண்டும் என்று இக்கூட்டம் கோரியது.

கூட்டத்துக்குப்பிறகு, மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்ட பெய்சுவான் மாவட்டத்திற்கு, ஹுசிந்தாவ் உடனடியாக சென்றார்.