• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-05-16 11:01:00    
நிலநடுக்கத்தினால் பாதிக்கப்பட்டப் பிரதேசங்களில் மருத்துவ உதவி மற்றும் நோய் தடுப்புப் பணி

cri
சீன சிச்சுவான் மாநிலத்தின் வென் சுவான் மாவட்டத்தில் நிலநடுக்கம் நிகழ்ந்தப் பின், சில அதிர்வுகள் தொடர்ந்து ஏற்பட்டன. போக்குவரத்து இன்னும் முற்றிலும் மீட்கப்படவில்லை. சீனாவின் பல்வேறு இடங்களைச் சேர்ந்த மருத்துவப் பணியாளர்கள் வான், நீர் ஆகிய வழிகளிலும், நடந்து செல்வதன் மூலமும் பாதிக்கப்பட்டப் பிரதேசங்களுக்குச் செல்ல முயன்று வருகின்றனர். சீன அரசு மருந்து மற்றும் மருத்துவ சிகிச்சை வசதிகளைத் திரட்டி, அவசரமாக மேற்கூறிய இடங்களுக்கு அனுப்பி வருகின்றது. 15ம் நாள் காலை 10 மணி வரை, 10 ஆயிரத்துக்கும் அதிகமான மருத்துவப் பணியாளர்கள் நிலநடுக்கத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் மருத்துவ சிகிச்சை மற்றும் நோய் தடுப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பாதிக்கப்பட்ட இடங்களில் 23 ஆயிரத்துக்கு அதிகமான மக்கள் சிகிச்சை பெற்றுள்ளனர். இந்த முயற்சியின் மூலம், அப்பிரதேசங்களில் கடும் தொற்று நோய் பரவல் மற்றும் திடீர் பொதுச் சுகாதார சம்பவங்கள் ஏதும் நிகழாமல் தவிர்க்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

வென் சுவான் நிலநடுக்கத்துக்குப் பின், சீனச் சுகாதார அமைச்சகம் முதல் தர முன்னெச்சரிக்கை அமைப்பு முறையைத் துவக்கியது. நிலநடுக்கம் நிகழ்ந்த நாளின் இரவில், சுகாதார அமைச்சகம் 700 பேர் இடம்பெறும் மருத்துவ மீட்புதவி அணியை ஏற்பாடு செய்தது. மருந்து, மருத்துவ சிகிச்சை வசதி ஆகியவற்றைக் கொண்ட இந்த அணி மறுநாள் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்குச் சென்றது. இதற்கு பிந்திய 2 நாட்களில், நாள்தோறும் பல ஆயிரம் மருத்துவப் பணியாளர்கள் அப்பிரதேசங்களைச் சென்றடைந்துள்ளனர். நேற்று காலை 8 மணிக்குள்ளாக, சிச்சுவான் மாநிலத்தில் நிலநடுக்கத்தினால் பாதிக்கப்பட்ட அனைத்து பிரதேசங்களிலும் மருத்துவ மீட்புதவி அணிகள் கடமையில் ஈடுபட்டினர். தற்போது பல்வேறு நிவாரணப் பணிகள் சுறுசுறுப்பாக மேற்கொள்ளப்படுகின்றன. மருந்து மற்றும் மருத்துவ சிகிச்சை வசதிகளின் தேவையை நிறைவேற்ற நடுவண் அரசு சுமார் 60 கோடி யுவான் மதிப்புள்ள சிறப்புத் தொகையை ஒதுக்கிவைத்துள்ளது.

நேற்று பெய்ஜிங்கில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் சீனச் சுகாதார அமைச்சர் gao qiang கூறியதாவது

மருத்துவ சிகிச்சை மற்றும் நோய் தடுப்புக்கான பொருட்களை பாதிக்கப்பட்ட அனைத்து பிரதேசங்களுக்கும் அனுப்ப வேண்டும். தரை போக்குவரத்து துண்டிக்கப்பட்டால், வான் வழி மூலமும், நடந்து செல்வதன் மூலமும் மருத்துவப் பணியாளர்களையும், நோய் தடுப்புப் பணியாளர்களையும், மருத்துவ சிகிச்சைப் பொருட்களையும் அங்கே அனுப்ப வேண்டும். பயன் தரும் மருத்துவ சிகிச்சை மூலம், உயிர் இழப்பைக் கூடிய அளவில் குறைக்க வேண்டும். நிலநடுக்கத்தினால் பாதிக்கப்பட்டப் பிரதேசங்களில் கடும் தொற்று நோய் நிகழாமல் தடுக்கப் பாடுபட வேண்டும் என்றார் அவர்.

தவிர, அந்த மருத்துவ அணிகளில், உளவியல் நிபுணர் இடம்பெறுகின்றனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவர்கள் உள நல ஆற்றுப்படுத்தல் மற்றும் ஆலோசனை வழங்குகின்றனர்.

சுகாதார தொகுதி மட்டுமல்ல, சீன இராணுவ வட்டாரமும் மருத்துவ மீட்புதவி அணிகளை உருவாக்கி பாதிக்கப்பட்டப் பிரதேசங்களுக்கு அனுப்பியுள்ளது. சீன மக்கள் விடுதலை படையின் பின்னணி சேவைப் பிரிவைச் சேர்ந்த அதிகாரி ren guo quan கூறியதாவது

முதலுதவி, தொற்று நோய் கிருமி தடுப்பு, நோய் தடுப்பு ஆகியவற்றுடன் தொடர்பான மருந்துகளையும், போர்ச்சூழல் போன்ற போதிய வசதியற்ற நிலையிலும் பயன்படுத்தக் கூடிய சுகாதார சாதனங்களையும் நாம் ஏற்பாடு செய்துள்ளோம். இதுவரை, இந்தப் பொருட்கள் 5 விமான நிலையங்களிலிருந்து சென் துவுக்கு அனுப்பப்பட்டன. முதல் தொகுதி மருந்துகள் நேற்று முற்பகல் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு வான் வழியே கீழே பாதுகாப்பாக வீசப்பட்டன என்றார் அவர்.

72 மணி நேரம் என்ற சிறந்த மீட்புதவிக் கால அவகாசத்தை கடந்துவிட்டாலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கான மீட்புதவி முயற்சியை அரசு கைவிடாது என்று சீன சுகாதார அமைச்சர் gao qiang கூறினார். அதேவேளையில், கடும் இயற்கை சீற்றத்துக்குப் பின் கடும் நோய் நிலைமை நிகழாமல் தடுக்க இந்தப் பிரதேசங்களில் நீர் மூலவள பாதுகாப்பு, சுற்றுச்சூழல் நச்சுயிரி ஒழிப்பு, தொற்று நோய் தடுப்பு முதலிய பணிகளையும் சுகாதார அமைச்சகம் மேற்கொள்ள துவங்கியுள்ளது.

இயற்கைச் சீற்றத்துக்குப் பின், பல நாடுகளின் அரசுகள் ஆழ்ந்த அனுதாபத்தையும் ஆறுதலையும் தெரிவித்ததுடன் வலுவான உதவிகளை அளித்துள்ளன. இது குறித்து, சீன அரசு இதயப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துள்ளது.

பாதிக்கப்பட்ட மக்களை பார்த்து ஆறுதல் கூற, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி பொது செயலாளரும், சீன அரசுத் தலைவரும், சீன இராணுவ ஆணையத்தின் தலைவருமான ஹு சிந்தாவ், இன்று காலை விமானம் மூலம், சிச்சுவான் மாநிலத்துக்குச் சென்றுள்ளார்.