• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-05-16 10:16:46    
2008ம் ஆண்டு சீனா

cri

சீன மக்கள் எந்த இன்னல்களுக்கும் அடிபணிந்து விட மாட்டார்கள் என்று மக்கள் நாளேடு இன்று வெளியிட்ட பெயரிட்ட கட்டுரை கூறியது.

 

2008ம் ஆண்டு, சீனாவுக்கு அசாதாரணமான ஆண்டாகும். இவ்வாண்டின் துவக்கத்தில், சீனாவின் தென் பகுதிகளில் கடும் பனிச் சீற்றம் ஏற்பட்டது. நாடு முழுவதிலும் பேரிடர் நீக்கப் பணி அவசரமாக மேற்கொள்ளப்பட்டது. மார்ச் 14ம் நாள், சீனாவின் லாசாவில் அடிதடி,சீர்குலைத்தல்,கொள்ளையடித்தல் மற்றும் தீயால் நாசமாக்குதல் போன்ற வன்செயல்கள் நிகழ்ந்தன. தாய்நாட்டின் ஒன்றிணைப்பையும் பல்வேறு தேசிய இனங்களின் ஒற்றுமையையும் பேணிக்காக்கும் சீன மக்களின் உறுதியான நம்பிக்கையால், திபெத்திலும், இதர பிரதேசங்களிலும் அமைதியும் சமூக ஒழுங்கும் வேகமாக மீட்கப்பட்டது. வெளிநாட்டிலான பெய்சிங் ஒலிம்பிக் தீபத் தொடரோட்டம் சில திபெத் சுதந்திரவாதிகளால் சீர்குலைக்க முயற்சிக்கப்பட்டது. ஆனால், உலகின் சீன மக்கள் முன்னெப்போதும் கண்டிராத அளவில் ஒன்றுபட்டுள்ளனர் என்று இக்கட்டுரை குறிப்பிட்டது.

 

அண்மையில், சிச்சுவன் மாநிலத்தின் வென்ச்சுவன் மாவட்டத்தில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதே நாள், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் ஹு சிந்தாவ் உடனடியாக மத்திய அரசியல் குழுவின் நிரந்தரக் கமிட்டிக் கூட்டம் நடத்தி, மீட்பு உதவி பணிகளை ஏற்பாடு செய்தார். அதே வேளையில்,சீனத் தலைமையமைச்சர் வென் சியாபாவ் நிலநடுக்கம் நிகழ்ந்ததும் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு விரைந்து சென்றார். சீன மக்கள் விடுதலைப் படையினர், ஆயுதக் காவற்துறையினர், காவற்துறையினர் ஆகியோர் இப்பிரதேசங்களுக்கு வேகமாக சென்று, மீட்புப் பணியை மேற்கொண்டுள்ளனர். உலகின் பல்வேறு பகுதிகளில் வாழ்கின்ற சீனர் ஆக்கப்பூர்வமாக நிதியையும் பொருட்களையும் வழங்கியுள்ளனர் என்று கட்டுரை தெரிவித்தது.

 

சீன மக்கள், சீன அரசு, சீனப் படை ஆகியோர் எந்த இன்னல்களுக்கும் அடிபணியாது என்றும் இக்கட்டுரை சுட்டிக்காட்டியது.