அண்மையில் சீனச் சிச்சுவான் மாநிலத்தின் வென்ச்சுவான் மாவட்டத்தில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்ட பின், வெளிநாட்டிலுள்ள சீனத் தூதரகங்களின் பணியாளர்களும், பிரிட்டன், ரஷியா, ஜெர்மனி, இத்தாலி முதலிய நாடுகளிலுள்ள சீனர்களும் ஆக்கப்பூர்வமாக நிதியுதவி வழங்கி வருகின்றனர். நிலநடுக்கதால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களின் மறுசீரமைப்பு, பாதிக்கப்பட்ட மக்களின் சீரான வாழ்க்கை ஆகியவற்றுக்கு, இது பங்காற்றும்.
ருமேனியா, மலேசியா, உகான்டா, மொரோக்கோ, மான்ட நீக்ரோ ஆகியவற்றிலுள்ள சீனர்களும் சீன நிறுவனங்களும் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டோருக்கு நிதியுதவி வழங்கியுள்ளன.
நைஜீரியாவின் லாகோஸிலுள்ள பெயரைத் தெரிவிக்க விரும்பாத சீன தொழில் முனைவோர் ஒருவர் 5இலட்சம் அமெரிக்க டாலர் வழங்கியுள்ளார். வெளிநாட்டிலுள்ள சீனர்கள் தாய்நாட்டுடன் இணைந்து இருக்கின்றனர். தன் பெயரை பதிவு செய்வது முக்கியமல்ல. பேரிடர் நீக்க பணிகளுக்கு தம்மால் இயன்ற பங்கு ஆற்றுவதே முக்கியமானது என்று அந்த நபர் கூறியுள்ளார்.
|