• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-05-16 16:32:47    
சர்வதேசச் சமூக உதவி

cri

சீனச் சிச்சுவான் மாநிலத்தின் வென்ச்சுவான் மாவட்டத்தில் ஏற்பட்ட கடும் நிலநடுக்கத்திற்கு பின், வெளிநாட்டிலுள்ள சீனத் தூதரகங்களின் பணியாளர்களும், வெளிநாடுகளில் வாழ்கின்ற சீனர்களும் ஆக்கப்பூர்வமாக நிதியுதவி வழங்கி வருகின்றனர். நிலநடுக்கதால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களின் மறுசீரமைப்பு, பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கை ஆகியவற்றுக்கு, இது பங்காற்றும். முழுமையாகாத புள்ளிவிபரங்களின் படி, கடல்கடந்த சீனர்கள், பாதிக்கப்பட்ட சிச்சுவான் பிரதேசங்களுக்கு வழங்கியுள்ள பணமும் பொருட்களின் மதிப்பும் 16 கோடி யுவானைத் தாண்டியுள்ளது.

ரஷியா, ஜெர்மனி, நைஜீரியா, ருமேனியா, மலேசியா, உகான்டா, மொரோக்கோ, மான்ட நீக்ரோ ஆகியவற்றிலுள்ள சீனர்களும் சீன நிறுவனங்களும் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டோருக்கு நிதியுதவி வழங்கியுள்ளன.

நைஜீரியாவின் லாகோஸிலுள்ள பெயரைத் தெரிவிக்க விரும்பாத சீன தொழில் முனைவோர் ஒருவர் 5இலட்சம் அமெரிக்க டாலர் நன்கொடையாக வழங்கியுள்ளார். வெளிநாட்டிலுள்ள சீனர்கள்  தாய்நாட்டின் துன்ப் நேரத்தில் இணைந்து இருக்கின்றனர். பெயரை பதிவு செய்வது முக்கியமல்ல. பேரிடர் நீக்க பணிகளுக்கு தம்மால் இயன்ற பங்கு ஆற்றுவதே முக்கியமானது என்று அந்த நபர் கூறியுள்ளார்.