சி ச்சுவான் மாநிலத்திலுள்ள முக்கிய சுற்றுலா இடங்கள், நிலநடுக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட வில்லை. வோ லூங் இராட்சத பாண்டா பாதுகாப்பு மையத்தின் இராட்சத பாண்டாக்கள் காயமுற வில்லை என்று சீன சி ச்சுவான் மாநிலத்தின் சுற்றுலா ஆணையத்தின் தலைவர் சாங் கு இன்று சந்து நகரில் உறுதிப்படுத்தினார்.
அவர் கூறியதாவது— து சியான் யன் நகரின் ஏல் வாங் கோயில், பாதிக்கப்பட்டது தான். ஜியு சே கோ, ஏ மே மலை உள்ளிட்ட சுற்றுலா இடங்கள், கடுமையாக பாதிக்கப்பட்ட வில்லை. வோ லூங் இராட்சத பாண்டா பாதுகாப்பு மையமும் பாதிக்கப்பட வில்லை.
சி ச்சுவான் மாநிலத்தின் சுற்றுலாத் துறை கடுமையாக பாதிக்கப்படாத போதிலும், குறிப்பிட்ட காலத்துக்கு பின்னர் தான் சுற்றுலா பயணத்தை மீட்க முடியும் என்று அவர் தெரிவித்தார்.
|