சீனாவின் சிச்சுவான் மாநிலத்தின் வென் சுவான் மாவட்டத்தில் ரிக்டர் அளவையில் 7.8 என பதிவான நிலநடுக்கதத்திற்கு பின், சீன அரசு மற்றும் மக்களின் முயற்சிகளுக்கு சர்வதேசச் சமூகம் ஆதரவு அளித்து வருகின்றது. சீன அரசின் பயனுள்ள பேரிடர் நீக்கப் பணிகளை சில சர்வதேச மற்றும் பிரதேச அமைப்புகளின் பொறுப்பாளர்கள் வெகுவாகப் பாராட்டின.
சீன அரசின் பேரிடர் நீக்கப் பணிகள் வலிமை மிக்க அளவில் மேற்கொள்ளப்படுகின்றன. தொற்று நோய் பரவுவதை குறைப்பதற்கு இது முக்கியமானது என்று உலக சுகாதார அமைப்பின் நோய் கட்டுப்பாடு மற்றும் மனித நேய அவசர நிகழ்ச்சி துறைகளின் நிபுணர் Stephen Martin 14ம் நாள் கூறினார்.
நிலநடுக்கம் ஏற்பட்ட பின், சீன அரசு விரைவாக நடவடிக்கைகளை மேற்கொண்டு, இடர் நீக்கப்பணிகாக படை மற்றும் பல்வேறு நிவாரண உதிவிப் பொருட்களை காலதாமதமின்றி திரட்டியுள்ளது என்று செஞ்சிலுவைச் மற்றும் செம்பிறைச் சங்கங்களின் சர்வதேச சம்மேளனத்தின் இயற்கை சீற்ற தடுப்பு மற்றும் சமாளிப்பு ஆணையத்தின் அதிகாரி க்கலாங் நேற்று கூறினார்.
நிலநடுக்கத்தை சமாளிக்கும் வகையில், சீன அரசு மற்றும் மக்கள் முயற்சி மேற்கொள்வதை ஆப்பிரிக்க ஒன்றியம் வெகுவாக பாராட்டியது என்று ஆப்பிரிக்க ஒன்றியத்தின் தலைவர் jean ping நேற்றிரவு வெளியிட்ட அறிக்கையில் கூறினார்.
|