நேற்று பிற்பகல் 2 மணி வரை, நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட சிச்சுவான் மாநிலத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை, 19 ஆயிரத்து 509 ஆகும். உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 50 ஆயிரத்தைத் தாண்டக் கூடும் என்று மதிப்பிடப்படுகிறது. தற்போது 20 ஆயிரத்துக்கு மேற்பட்டோர், இன்னும் இடிபாடுகளில் புதையுண்டுள்ளனர். பலர் காணாமல் போயினர் என்று சி ச்சுவான் மாநிலத்தில் பேரிடர் நீக்கப் பணியை மேற்பார்வையிட்டு தலைமையேற்று வரும் சீனத் தலைமையமைச்சர் வென் சியாபாவ் கூறினார்.
சிச்சுவான் மாநிலத்தின் வென் ச்சுவான் நிலநடுக்கத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட பிரதேசங்களின் பரப்பளவு, ஒரு இலட்சம் சதுர கிலோமீட்டரைத் தாண்டியுள்ளது. நவ சீனா நிறுவப்பட்ட பின், இந்நிலநடுக்கத்தின் சீரழிவு மிக கன்மையானதாகவும், பாதிக்கப்பட்ட அதன் பரப்பளவு, மிகப் பெரிதானதாகவும் இருக்கின்றது என்று நேற்றிரவு தொடர்வண்டியில் நடைபெற்ற நிலநடுக்கப் பேரிடர் நீக்கப் தலைமையகத்தின் கூட்டத்தில் வென் சியாபாவ் கூறினார்.
முழு நாட்டின் மக்களும் கூட்டாகப் பாடுபட்டு, மீட்புதவிப் பணியில் நன்றாக ஈடுபட வேண்டும் என்று அவர் வேண்டிக்கொண்டார். தற்போது, மீட்புதவி பணி காயமுற்றோரைக் காப்பாற்றும் முக்கிய காலத்தில் உள்ளது. நம்பிக்கை ஒளி இருந்தால் தான், முழு மூச்சுடன் பாடுபட வேண்டும். முயற்சிகளை கைவிடக் கூடாது என்று இன்று முற்பகல் செய்தியாளருக்குப் பேட்டியளிக்கும் போது, வென்சியாபாவ் கூறினார்.
நேற்று நண்பகல் வரை, சீன மக்கள் விடுதலை படை, இடிபாடுகளில் சிக்கியிருந்த சுமார் 10 ஆயிரம் மக்களைக் காப்பாற்றியுள்ளது. காயமுற்ற 13 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் சிகிச்சை பெற்றுள்ளனர்.
நேற்று வரை, சீன நடுவண் நிதித் துறை, மீட்புதவிப் பணிக்கு 341 கோடி யுவானை ஒதுக்கீடு செய்துள்ளது. முழு நாட்டிருந்தும் வழங்கப்பட்டுள்ள நிதியுதவி மற்றும் பொருட்களின் மொத்த மதிப்பு, 134.4 கோடி யுவான் ஆகும்.
|