அண்மையில் சீனச் சிச்சுவான் மாநிலத்தின் வென்ச்சுவான் மாவட்டத்தில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்ட பின், பேரிடர் நீக்க பணிகளில், சீன அரசு நடவடிக்கைகளை கணிசமாக பயன்தரும் முறையில் மேற்கொள்வதை வெளிநாட்டு சில செய்தி ஊடகங்கள் வெகுவாக பாராட்டியுள்ளன.
கடும் நிலநடுக்கம் ஏற்பட்ட பின், சீன அரசு மற்றும் மக்கள் மனம் ஒருமித்து கடினமாக உழைந்தனர். சீன தேசிய இன எழுச்சி மேலும் பேரூக்கம் அளிக்கப்பட்டது என்று பிரெஞ்சு Nouvelles d `Europe இன்று வெளியிட்ட தலையங்கத்தில் கூறியது. சீன அரசு, கணிசமாக, வெளிப்படையாக மற்றும் பயன்தரும் முறையில் மீட்புஉதவி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது என்று சிங்கப்பூர் lianhe zaobao இன்று வெளியிட்ட தலையங்கத்தில் கூறியது.
தவிர, இந்தோனேசியா, ஆஸ்திரேலியா, நிராகுவே முதலிய நாடுகளின் முக்கிய செய்தி ஊடகங்கள் சிச்சுவான் மாநிலத்தில் கடும் நிலநடுக்கம் பற்றிய ஆசிரியர் தலையங்கம் வெளியிட்டன.
|