• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-05-17 18:02:25    
நிலநடுக்கத்தினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை

cri
இன்று பிற்பகல் 2 மணி வரை, சிச்சுவான் மாநிலத்தின் வென் சுவான் மாவட்டத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 28 ஆயிரத்து 881ஆக மாறியுள்ளது. சுமார் 2 இலட்சம் பேர் காயமடைந்தனர் என்று தெரிய வருகின்றது.இன்று பிற்பகல் 4 மணியளவில், நிவாரணப் பணியின் புதிய நிலைமை பற்றி அரசவை செய்தி அலுவலகம் செய்தியாளர் கூட்டம் நடத்தியது. இவ்வலுவலகத்தின் செய்தி பிரிவின் தலைவர் guo wei min கூறியதாவதுதற்போது, நிலநடுக்கத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் கடும் தொற்று நோய் மற்றும் திடீர் பொதுச் சுகாதார சம்பவங்கள் ஏதும் நிகழவில்லை. அடிப்படை வசதிகள் தொடர்ந்து மீட்கப்பட்டு வருகின்றன. பொருள் விநியோக நிலைமை நிதானமாக உள்ளது. 16ம் நாள் வரை, பாதிக்கப்பட்ட பிரதேசங்களின் 70 விழுக்காட்டு பகுதியில் தற்காலிக குடிநீர் விநியோகம் மீட்கப்பட்டுள்ளது. ஆனால், இன்னும் 14 இலட்சம் மக்களிடையில் நீர் பற்றாக்குறை நிலை நிலவுகின்றது என்றார் அவர்.நேற்று இரவு 8 மணி வரை, மொத்தம் 34 ஆயிரம் மருத்துவப் பணியாளர்கள் சிச்சுவான் மாநிலத்தில் மீட்புதவிப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.ஜப்பான், ரஷியா, தென் கொரியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளிலிருந்து வந்த 4 சர்வதேச மீட்புதவி அணிகள் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை சென்றடைந்துள்ளன.