சிச்சுவான் மாநிலத்தில் நிலநடுக்கம் நிகழ்ந்த இடத்தில் தொற்று நோய் நிகழும் சாத்திய கூறு நிலவிய போதிலும், போதுமான உரிய நடவடிக்கை மேற்கொண்டால், கடும் நோய் நிலைமை நிகழாமல் தவிர்க்கலாம். சீனாவிலுள்ள உலக சுகாதார அமைப்பின் பிரதிநிதி Hans Troedsson நேற்று இவ்வாறு கூறினார்.
சீனாவிலுள்ள இவ்வமைப்பின் பிரதிநிதி அலுவலகமும், சீன சுகாதார அமைச்சகத்துடன் நெருக்கமான தொடர்பு மேற்கொண்டு, இது பற்றி ஆராய்ந்து வருகின்றது. பாதிக்கப்பட்ட பிரதேசங்களின் நிலைமையை சீனா உணர்வுப்பூர்வமாக மதிப்பிட்டது என்றும் அவர் கூறினார். தற்போது, இந்த பகுதியில் கடுமையான நோய் நிலைமை தோன்றவில்லை. உரிய தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டால், இது நிகழாமல் தவிர்க்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
|