• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-05-17 17:25:18    
பேரிடர் நீக்கப்பணியை தலைமை தாங்கிய சீன அரசுத் தலைவர்

cri

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளரும், சீன அரசுத் தலைவரும், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் ராணுவ ஆணையத்தின் தலைவருமான ஹு சிந்தாவ், 17ம் நாள் காலை, வாகனம் மூலம் சிச்சுவான் மாநில நிலநடுக்கத்தின் மையப்பகுதியான வென்ச்சுவான் மாவட்டத்துக்குச் சென்று, பேரிடர் நீக்கப் பணியை தலைமை தாங்கி கொண்டிருக்கின்றார்.

மே 12ம் நாள் நிலநடுக்கத்துக்கு பின், தொடர்புடைய வாரியங்கள காயமுற்றோரை வெகுவாக காப்பாற்றி, பாதிக்கப்பட்ட மக்களின் உயிர் பாதுகாப்பை உத்தரவாதம் செய்ய வேண்டும் என்று ஹு சநிந்தாவ் உடனடியாக கோரினார். 12ம் மற்றும் 14ம் நாட்களில் நடைபெற்ற சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழுவின் கூட்டங்களில், பேரிடர் நீக்க பணியை அவர் பன்முகங்களிலும் திட்டம் வகுத்தார். 16ம் நாள், விமானம் மூலம், சிச்சுவான் மாநிலத்தில் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் ஒன்றான மியன் யாங் நகரிலான விமான நிலையத்தை சென்றடைந்த பின், ஹு சிந்தாவ் உடனடியாக கூட்டத்திற்கு தலைமை தாங்கி, அங்கே இருந்த சீனத் தலைமை அமைச்சர் வென் சியாபாவ் உள்ளிட்ட இதர தலைவர்களுடன், பேரிட்ட நீக்கப் பணி பற்றி ஆராய்ந்தார்.

இக்கூட்டத்துக்கு பின், ஹு சநிந்தாவ் உடனடியாக கடுமையாக பாதிக்கப்பட்ட பெய்சிசுவான் மாவட்டத்துக்கு சென்றார். கட்சியும் அரசும் தங்களால் இயன்ற அளவில், பாதிக்கப்பட்ட மக்களை காப்பாற்றி, காயமுற்றோருக்கு சிகிச்சையளித்து, பொது மக்களின் வாழ்க்கைக்கான ஏற்பாடுகளை செவ்வனே செய்து, உற்பத்தியை மீட்டெடுத்து, தாயகத்தை மீண்டும் கட்டியெழுக்க வேண்டும் என்று ஹு சிந்தாவ் அங்கே மக்களிடம் தெரிவித்தார்.

தவிரவும், அங்கே பேரிடர் நீக்கப்பணியில் ஈடுப்பட்டு கொண்டிருக்கின்ற படை அதிகாரிகளையும் வீரர்களையும் அவர் சந்தித்துரையாடினார்.