ஜப்பானின் 2வது மீட்புதவிக் குழு 17ம் நாள் சிச்சுவான் மாநிலத்தில் பாதிக்கப்பட்ட பிரதேசத்தை சென்றடைந்து, முதலாவது மீட்புதவிக்குழுவுடன் இணைந்து பெய்ச்சுவான் மாவட்டத்துக்குச் சென்று, மீட்புதவிப் பணியில் ஈடுபட்டுள்ளது.
17ம் நாள் வரை, மொத்தம் 60 ஜப்பானிய மீட்புதவிப் பணியாளர்கள் சிச்சுவானில் பேரிடர் நீக்கப் பணியில் பங்கெடுத்துள்ளனர்.
பல்வேறு பாதிக்கப்பட்ட பிரதேசங்களிலான சர்வதேச மீட்புதவிக்குழுவடன் தொடர்பை நிலைநிறுத்தி, மீட்புதவிப் பணி பற்றிய புதிய நிலைமைகளை அறிந்து கொள்வதற்காக, சீன வெளியுறவு அமைச்சகம் சிச்சுவான் மாநிலத்தின் செங்து நகரில் பேரிடர் நீக்கப்பணிக்குழுவை உருவாக்கியுள்ளது. சீனாவில் மேற்கொண்ட பேரிடர் நீக்கப்பணியில் சீன மற்றும் வெளிநாட்டு மீட்புதவிப்பணியாளர்கள் கூட்டாக ஒத்துழைப்பது என்பது இதுவே முதன்முறையாகும்.
16ம் நாள் முதல், ஜப்பான், ரஷியா, தென் கொரியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளிலிருந்து வந்த மீட்புதவிக்குழுக்கள், சிச்சுவான் மாநிலத்தில் பாதிக்கப்பட்ட பிரதேசங்களைச் சென்றடைந்து, மீட்புதவிப்பணியில் ஈடுபட்டுள்ளன.
|