• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-05-17 19:08:09    
உயிருக்கான மாபெரும் மீட்புப் பணி(II)

cri

சிச்சுவான் மாநிலத்தின் வென்ச்சுவான் மாவட்டத்தில் கடும் நிலநடுக்கம் நிகழ்ந்து 100 மணி நேரத்துக்கும் மேல் கடந்து விட்டது. 72 மணி நேரம் என்ற சிறந்த மீட்புதவிக் கால அவகாசத்தை கடந்து இருந்த போதிலும், மீட்பு உதவிப் பணியாளர்கள் ஒவ்வொரு உயிரின் மதிப்பையும், அதை மீட்கும் விருப்பத்தையும் கைவிடவில்லை. தம்மால் இயன்ற நடவடிக்கைகள் அனைத்தையும் மேற்கொள்வதாக, சீன நாட்டுத் தலைவர்கள் ஹுசிந்தாவும் வென் சியாபாவும் தெரிவித்தனர். தற்போது,மனித உயிருக்கான மீட்புதவியை முக்கியமாக கொண்ட மாபெரும் நடவடிக்கையை, மீட்புப் பணியாளர்கள் முழுமையாக மேற்கொள்கின்றனர்.

நேற்று பிற்பகல் 2 மணி வரை, வென்ச்சுவான் நிலநடுக்கத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 28ஆயிரத்து 881ஐ எட்டியது. தற்போது, மீட்புதவிப் பணிக்கு, சீன மக்கள் விடுதலைப் படையும் ஆயுத காவற்துறையும் ஒரு இலட்சத்து பத்தாயிரம் பேரை பணித்துள்ளன. சுமார் 100 இராணுவ ஹெலிகாப்டர்கள் மீட்புப் பணியில் பங்கெடுத்துள்ளன.

நேற்று இரவு 8மணி வரை, சிச்சுவான் மாநிலத்தின் பல்வகை மருத்துவ மனைகளில் காயமுற்ற ஒரு இலட்சத்து பத்தாயிரம் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பெற்றனர். அவர்களில் 16ஆயிரம் கடுங்காயமுற்றவர்கள் என்று அறியப்படுகிறது.

இது வரை, பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் கடும் தொற்று நோய் மற்றும் திடீர் பொது சுகாதார சம்பவங்கள் ஏதும் நிகழவில்லை. அடிப்படை வசதிகள் படிப்படியாக மீட்கப்பட்டு வருகின்றன. பொருட்களின் விநியோகம் பற்றிய நிலைமை நிதானமாக உள்ளது. நேற்று வரை, பாதிக்கப்பட்ட 70விழுக்காட்டு நகரங்களில் தற்காலிக நீர் விநியோகம் மீட்கப்பட்டுள்ளது.

சீன பொது துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளிவிபரங்களின் படி, இன்று பிற்பகல் ஒரு மணி வரை உள் மற்றும் வெளி நாட்டுச் சமூகத்தின் பல்வேறுத் துறைகள் 600கோடி யுவான் மதிப்புள்ள நிதியையும் பொருட்களையும் வழங்கியுள்ளன.