சீனா முழுவதிலும் துக்கம் அனுசரிக்கப்படும்
cri
சிச்சுவான் மாநிலத்தில் கடும் நிலநடுக்கத்தில் உயிர் இழந்த உடன்பிறப்புகளுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில், சீனாவில் மே 19ம் நாள் முதல் 21ம் நாள் வரை, துக்கம் அனுசரிக்கப்படும் என சீன அரசவை இன்று அறிவித்தது. இக்காலக்கட்டத்தில், நாடு முழுவதிலும் மற்றும் வெளிநாடுகளிலுமுள்ள பல்வேறு நிறுவங்கள், தேசிய கொடி அரை கம்பத்தில் இறக்கப்படும். பொது பொழுதுபோக்கு நடவடிக்கைகள் நிறுத்தப்படும். வெளியுறவு அமைச்சகம், வெளிநாடுகளுக்கான சீனத் தூதரகங்கள் ஆகியவற்றில் உயிரிழந்தோருக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் கையெழுதிடும் புத்தகம் வைக்கப்படும். 19ம் நாள் பிற்பகல் 2:28 மணி முதல், சீன மக்கள் அனைவரும் 3 நிமிட நேரம் மௌனம் அஞ்சலி செலுத்துவர். அப்போது, வாகனங்கள், தொடர்வண்டிகள், கப்பல்கள் ஆகியவை ஒலி எழுப்பும். விமான எச்சரிக்கை மணியும் ஒலிக்கப்படும்.
|
|