• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-05-18 16:58:07    
பேரிடர் நீக்கப் பணிக்கு தலைமை தாங்கிய ஹு சிந்தாவ்

cri

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளரும், சீன அரசுத் தலைவரும், சீன மத்திய ராணுவ ஆணையத்தின் தலைவருமான ஹு சிந்தாவ், மே 17ம் நாள் சிச்சுவான் மாநில நிலநடுக்கத்தின் மையப்பகுதியான வென்ச்சுவான் மாவட்டத்துக்குச் சென்று, பேரிடர் நீக்கப் பணிக்குத் தலைமை தாங்கி கொண்டிருக்கின்றார்.

வென்ச்சுவான் மாவட்டத்தில்

இன்னல்களை சமாளித்து, தங்களால் இயன்ற அளவில் சீற்றத்தால் ஏற்பட்ட இழப்பை குறைக்குமாறு, இம்மாவட்டத்தில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பெய்ச்சுவான் இடை நிலை பள்ளியில் பேரிடர் நீக்கப் பணியில் ஈடுபட்டு வரும் படை அதிகாரிகளையும் போர்வீரர்களையும் ஹு சிந்தாவ் ஊக்குவித்தார். இதற்கு பின், அவர் கடுமையாக பாதிக்கப்பட்ட உள்ளூர் தொழில் நிறுவனங்களுக்கு சென்று, பேரிடர் நீக்கப் பணியை செவ்வனே செய்ததோடு, உற்பத்தியை மீட்டெடுத்து தாயகத்தை மீண்டும் கட்டியெழுக்கும் பணியை செவ்வனே மேற்கொள்ள வேண்டும் என்று உள்ளூர் மக்களுக்கு ஊக்கமளித்தார்.

செங்து நகரில் நடைபெற்ற கூட்டத்தில்

நேற்றிரவு சிச்சுவான் செங்து நகரில் நடைபெற்ற கூட்டத்தில், பேரிடர் நீக்கப் பணி பற்றிய நிலைமையை ஹு சிந்தாவ் கேட்டறிந்து, அடுத்த கட்டத்திலான பேரிடர் நீக்கப் பணியை திட்டம் வகுத்தார். தற்போது, பேரிடர் நீக்கப் பணியின் நிலைமை இன்னும் கடினமாக உள்ளது என்று அவர் கூறினார். பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் பல்வேறு நிலை கட்சி கமிட்டிகள் மற்றும் அரசுகள், நடுவண் அரசின் தொடர்புடைய வாரியங்கள் ஆகியவை, நடுவண் அரசின் கோரிக்கையை உறுதியாக செயல்படுத்தி, பேரிடர் நீக்கப் பணியை முக்கிய அவசர கடமையாக நிறைவேற்ற வேண்டும் என்று ஹு சிந்தாவ் வலியுறுத்தினார். தங்களால் இயன்ற அளவில் பாதிக்கப்பட்ட மக்களை கண்டறிந்து பாதுகாத்து, காயமுற்றோரை காப்பாற்றி, பாதிக்கப்பட்ட மக்களின் அடிப்படை வாழ்க்கைக்கான ஏற்பாடுகளை செவ்வனே செய்து, அடிப்படை வசதிகளை காலத்தாமதமின்றி மீட்டு, மறுசீரமைப்புக்கான முன்னேற்பாட்டுப் பணியை சிறப்பாகச் செய்ய வேண்டும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

Shi Fang நகரில்

இன்று காலை, சிச்சுவான் மாநிலத்தில் பாதிக்கப்பட்ட பிரதேசங்களிலான Shi Fang நகரில் ஹு சிந்தாவ் தொடர்ந்து பரிசோதனை செய்து கொண்டிருகின்றார்.