மே 17ம் நாள் நண்பகல் 12 மணி வரை, சீனச் செஞ்சிலுவை தலைமை சங்கம் மற்றும் அதைச் சேர்ந்த பல்வேறு நிலை செஞ்சிலுவை சங்கங்கள், உள் நாட்டு மற்றும் வெளிநாடுகளிலிருந்து வந்த நன்கொடை மற்றும் பொருட்களின் மதிப்பு 183கோடி யுவானை எட்டியுள்ளது. தற்போது, நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு ஏறக்குறைய 40கோடி யுவான் மதிப்புள்ள மீட்புதவி தொகையையும் பொருட்களையும் செஞ்சிலுவை சங்கம் வழங்கியுள்ளது.
மே 18ம் நாள், சீனாவின் ஷான்சி மாநில சி ஆன் நகரிலுள்ள சீனச் செஞ்சிலுவையைச் சேர்ந்த பேரிடர் நீக்க மையம், பால், குடி நீர், போர்வை, மழைக் கோட், கூடாரம் உள்ளிட்ட 70இலட்சம் யுவான் மதிப்புள்ள நிவாரண பொருட்களை சிச்சுவானில் கடுமையாக பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு அனுப்பியது. தவிரவும், ஷாங்காய், குவாங்துங், யுன்னான் முதலிய இடங்களிலுள்ள சீனச் செஞ்சிலுவை சங்கத்தின் மையங்கள் மற்றும் சீனாவின் இதர இடங்களிலிருந்து கிடைத்த நன்கொடை நிதியும் அவசர மீட்புதவி பொருட்களும், சிச்சுவான், சுங்சின், கான் சு, ஷான்சி, யுன்னான், குவெய் சோ ஆகிய பாதிக்கப்பட்ட 6 பிரதேசங்களுக்கு ஏற்றுசெல்லப்பட்டன.
|