சீன சிச்சுவான் மாநிலத்தின் வென்ச்சுவான் மாவட்டத்தில் கடும் நிலநடுக்கம் நிகழ்ந்த பின், சர்வதேசச் சமூகம் தொடர்ந்து சீனாவுக்கு ஆறுதலை தெரிவித்ததோடு, மீட்புதவியையும் வழங்கி வருகின்றது.
தென் ஆப்பிரிக்க அரசுத் தலைவர் மபெகி, அர்ஜென்டீன அரசுத் தலைவர் க்ரிஸ்டினா அம்மையார், குயான அரசுத் தலைவர் ஜாகதெயௌ ஆகியோர், சீன அரசுத் தலைவர் ஹுசிந்தாவுக்கு ஆறுதலை தெரிவித்தனர்.
தவிர, மண்டே நீக்கிரோவின் வெளியுறவு அமைச்சர் ரோகென், பிஜி தற்காலிக அரசின் வெளியுறவு அமைச்சர் நைலாடிகௌ, நியூசிலாந்தின் நாடாளுமன்றம், போலிவிய நாடாளுமன்றம், சர்வதேச குடியேறுவோர் அமைப்பு, உலக பொருளாதார மன்றம் ஆகியோர் சீன தரப்புக்கு ஆறுதலை தெரிவித்தனர்.
மலேசியா, ஆஸ்திரேலியா, இத்தாலி, பின்லாந்து, ஹோலாந்து, கிரோஷியா,லக்சம்பர்க்,ஸ்பெயின் ஆகிய நாடுகளின் அரசகங்கள் சீனாவுக்கு மீட்புதவியை வழங்கின.
|