கடந்த சில நாட்களாக, வெளிநாடுகளிலுள்ள சீன தூதரகங்கள், வெளிநாட்டிலுள்ள சீனர்கள், சீன நிறுவனங்கள், சீன மாணவர்கள் ஆகியோர், நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட சிச்சுவான் பிரதேசங்களில் நிதியுதவியை வழங்கி வருகின்றனர்.
நேற்று, அமெரிக்க லோஸ் அங்ஜெலெஸ் மாநிலத்திலுள்ள சீனப் பொது வணிகச் சங்கம் உள்ளுர் குவாங்துங் மொழி வானொலி நிலையத்துடன் சீனர்கள் அதிகமாக வாழ்கின்ற சிங்கைபோ நகரில் நன்கொடை நடவடிக்கை மேற்கொண்டது. அரை நாளில் திரட்டப்பட்ட நன்கொடை தொகை ஒரு இலட்சத்து 50ஆயிரம் அமெரிக்க டாலரைத் தாண்டியது.
பிலிப்பைன்ஸில் வாழ்கின்ற சீனர்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி வழங்கி வருகின்றனர். இது வரை, சீனச் சமூக நிறுவனங்களும் தனியார்களும் 2கோடி யுவானுக்கு மேலான நிதியுதவியை வழங்கியுள்ளனர்.
துருக்கியிலுள்ள சீன தூதரகமும், துருக்கி-சீன மகளிர் நட்புறவுச் சங்கமும் நேற்று தலைநகரான அங்காராவில் நன்கொடை நடவடிக்கையை மேற்கொண்டன. இதற்கு முன்பு, துருக்கி சீனாவுக்கு 30ஆயிரம் அமெரி்க்க டாலர் நிதியுதவி வழங்கியுள்ளது.
தவிர, நைஜீரியா, கென்யா, பெல்ஜியம், பிரிட்டன், ஈக்வடோர் முதலிய நாடுகளிலுள்ள சீனர், சீன தொழில் நிறுவனங்கள் முதலியவை நிதியுதவியை வழங்கியுள்ளன.
நேற்று வரை, இஸ்ரேலிலுள்ள சீனர்கள், தொழிலாளர்கள், மாணவர்கள், இஸ்ரேலின் நட்பு பிரமகர்கள் ஆகியோர் வழங்கிய 30ஆயிரம் அமெரிக்க டாலர் நிதியுதவியை, இந்நாட்டிலுள்ள சீன தூதரகத்துக்கு அனுப்பப்பட்டது.
பாகிஸ்தானிலுள்ள சீன நிறுவனங்கள், தொழில் முனைவோர், பாகிஸ்தானின் தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகள் ஆகியோர் நேற்று சீன தூதரகங்களுக்குச் சென்று நிதியுதவியை வழங்கியுள்ளனர்.
|