• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-05-19 09:04:38    
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கான நிதியுதவி

cri
சீனாவின் சி ச்சுவான் மாநிலத்தின் வென் ச்சுவான் மாவட்டத்தில் கடும் நிலநடுக்கம் நிகழ்ந்த பின், இந்தோனேசியா, ஜெர்மனி, ஐஸ்லாந்து, அல்பேனியா, ஐக்கிய அரபு நாடுகள், துருக்கி ஆகியவற்றில் வாழ்கின்ற சீனர்களும் சீன மாணவர்களும், கின்சாசா காங்கோவிலுள்ள சீனாவின் அமைதி காப்புப் படையின் மருத்துவ அணியும், பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு ஆர்வமாக நிதியுதவி வழங்கினர்.

நேற்று, பெர்லின் ஹுவா தே சீன மொழி பள்ளியின் 500க்கு மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு 1500 யூரோ தொகையை நன்கொடையாக வழங்கினர். 16ம் நாள் வரை, ஜெர்மனியிலுள்ள சீனத் தூதரகம் பெற்ற நன்கொடை தொகை, சுமார் 60 ஆயிரம் யூரோவைத் தாண்டியது.

தவிர, சின்கியாங் இராணுவ வட்டாரத்தைச் சேர்ந்த, கின்சாச காங்கோவுக்கான 8வது தொகுதி அமைதி காப்புப் படையின் மருத்துவ அணியின் அனைத்து 43 உறுப்பினர்கள், உள்நாட்டுப் படைக்கு அளித்த பொறுப்பை ஏற்றி, 24 ஆயிரத்து 300 யுவான் உதவி தொகையை, தொடர்புடைய வாரியங்களுக்கு வழங்கினர்.