• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-05-19 10:54:30    
சர்வதேசச் சமூகம், வெளிநாடுகளில் வாழ் சீனர்கள் மற்றும் வெளிநாட்டு நண்பர்களின் உதவி

cri
12ம் நாள், சீனாவின் சி ச்சுவான் மாநிலத்தின் வென் ச்சுவான் மாவட்டத்தில், கடும் நிலநடுக்கம் நிகழ்ந்த பின், சர்வதேசச் சமூகம் சீனாவுக்கு ஆறுதலைத் தெரிவித்தோடு, தொடர்ந்து மீட்புதவியை வழங்கி வருகின்றது. வெளிநாடுகளில் வாழ்கின்ற சீனர்கள் மற்றும் வெளிநாட்டு நண்பர்கள், பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு நிதியுதவியை வழங்கியுள்ளனர்.

தென் ஆப்பிரிக்க அரசுத் தலைவர் Thabo Mbeki, அர்ஜென்டீன அரசுத் தலைவர் Cristina Fernandez de Kirchner, Guyana அரசுத் தலைவர் Bharrat Jagdeo, Zimbabwe அரசுத் தலைவர் Robert Gabriel Mugabe, கனடிய தலைமையமைச்சர் Stephen Harper முதலியோர், சீன அரசுத் தலைவர் ஹு சிந்தாவுக்கு ஆறுதல் தெரிவித்தனர். மலேசியா, தாஜிக்ஸ்தான், பிரான்ஸ், ஸ்வீடன், எகிப்து முதலிய நாடுகளின் தலைமையமைச்சர்கள், சீனத் தலைமையமைச்சர் வென் சியாபாவுக்கு ஆறுதல் தெரிவித்தனர்.

அண்மையில், மலேசிய அரசு சீனாவுக்கு 15 இலட்சம் அமெரிக்க டாலர் நிதியுதவியை வழங்கத் தீர்மானித்துள்ளது. சர்வதேச செஞ் சிலுவைச் சங்கத்தின் மூலம், ஆஸ்திரேலிய அரசு, மகௌ நாணயத்தில் சீனாவுக்கு 10 இலட்சம் pataca நிதியுதவியை வழங்கியுள்ளது. இத்தாலி அரசு 5 இலட்சம் யூரோ நிதியுதவி மற்றும் பொருட்களை உதவியாக வழங்கியுள்ளது. பின்லாந்து அரசு 5 இலட்சம் யூரோ உதவியாக வழங்கியது.

அதே வேளையில், ஜப்பான், பிரான்ஸ், இந்தோனேசியா, ஜெர்மனி, ஐஸ்லாந்து, துருக்கி முதலிய நாடுகளில் வாழ்கின்ற சீனர்கள் மற்றும் மாணவர்களும், கின்சாசா காங்கோவிலுள்ள சீன அமைதிக் காப்புப் படையின் மருத்துவப் பிரிவினரும், பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு, ஆர்வமாக நிதியுதவியை வழங்கியுள்ளனர். அண்மையில், முழு ஜப்பானிலுள்ள சீன மாணவர்கள் நட்புறவு சங்கம் 30 இலட்சம் ஜப்பான் யென்னை உதவியாக அளித்துள்ளது. நேற்று வரை, எகிப்திலுள்ள சீனத் தூதரகம் 50 ஆயிரம் அமெரிக்க டாலருக்கு மேலான உதவி தொகையைப் பெற்றுள்ளது. தவிர, நேற்று, பிரான்ஸிலுள்ள சீனர்கள், மாணவர்கள் மற்றும் பிரான்ஸ் நண்பர்கள், 18ம் நாள் மெழுகுவர்த்தி ஏற்றி இறைவேண்டல் கூட்டம் நடத்தினர்.