• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-05-19 09:53:17    
சீனாவின் புத்தகக் கண்காட்சி

cri

18வது சீனத் தேசிய புத்தகக் கண்காட்சி அண்மையில் சீனாவின் மத்திய பகுதியிலுள்ள ஹெர்நான் மாநிலத்தில் நடைபெற்றது. நூற்றுக்கணக்கான தொடர்புடைய நடவடிக்கைகளோடு அமைந்த இப்பண்பாட்டு விழாவை, பல்வேறு வாசகர்கள் கூட்டாக அனுபவித்தனர்.

ஏப்ரல் திங்கள் 26ம் நாள், உலக அறிவுசார் சொத்துரிமை நாளாகும். அன்று 18வது சீனத் தேசிய புத்தகக் கண்காட்சி ஹெர்நான் மாநிலத் தலைநகரான zhengzhou நகரத்தில் துவங்கியது. சுமார் 30 இலட்சம் வெளியீடுகளை ஏறக்குறைய 2 ஆயிரத்து 600 நிறுவனங்கள் காட்சிக்கு வைத்தன. கண்காட்சியின் அளவு, வணிகர்களின் எண்ணிக்கை, வெளியீடுகளின் வகைகள் ஆகியவற்றில், முந்தைய கண்காட்சிகளின் அளவை இந்த கண்காட்சி தாண்டியது என்று கண்காட்சியின் அமைப்புக் குழுவின் துணை இயக்குநரும், சீனத் தேசிய செய்தி வெளியீட்டுத் தலைமை அலுவலகத்தைச் சேர்ந்த வெளியீட்டு நிர்வாக ஆணையத்தின் தலைவருமான fanweiping தெரிவித்தார்.

1980ம் ஆண்டின் முதலாவது தேசிய புத்தகக் கண்காட்சி நடைபெற்றது முதல் இது வரை, இந்த கண்காட்சி கணிசமான அளவில் வளர்ந்து வருகிறது. சீனச் செய்தி வெளியீட்டகத் துறையின் மாபெரும் வளர்ச்சியை இது எட்டுத்துக்காட்டியது. கடந்த 28 ஆண்டுகளில், இந்த புத்தகக் கண்காட்சியின் அளவு தொடர்ந்து விரிவாகி, செயல்திறன்கள் அதிகரிக்கப்பட்டு, சேவை வழிமுறைகள் பல்வகைமயமாகி, சமூகத்திலான இதன் செல்வாக்கு மேலும் அதிகரித்துள்ளது. மாபெரும் பன்நோக்கு விழாவாக மாறும் இந்த கண்காட்சி, சீனாவின் செய்தி வெளியீட்டகத் துறையின் வளர்ச்சி வரலாற்றின் முக்கிய சான்றாகும். வெளியீட்டகத் துறையின் சீர்திருத்தச் சாதனைகளை எடுத்துக்காட்டுவது, வளர்ச்சிக்கான அனுபவங்களைப் பரிமாறிக்கொள்வது, சோஷலிசச் சமூகத்தின் பண்பாட்டைக் கட்டியமைப்பது ஆகியவற்றின் முக்கிய அரங்காகவும் இது அமைகிறது என்று fanweiping கூறினார்.

நண்பர்களே, சீனாவின் புத்தகக் கண்காட்சி என்ற தகவலைப் படித்த பின், உங்கள் கருத்துக்களைத் தெரிவிக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம். உங்களுக்கு இத்தகவல் பிடித்திருக்கும் என்று நம்புகின்றோம். நன்றி!மீண்டும் சந்திப்போம்.