இன்று காலை 4:58 மணிக்கு, சீனாவின் டியென் அன் மன் சதுக்கத்தில், வழக்கமான கொடி ஏற்றத்திற்குப் பிறகு, அக்கொடி அரை கம்பத்தில் பறந்தது. சீனாவின் பல்வேறு தேசிய இன மக்கள், சி ச்சுவான் வென் சுவான் நிலநடுக்கத்தில் பலியானர்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தனர்.
ஹாங்காங் மற்றும் மக்கௌ சிறப்பு நிர்வாகப் பிரதேசங்களின் அரசு வாரியங்கள், பள்ளிகள் முதலிய முக்கிய இடங்களில், கொடிகள் அரை கம்பத்தில் பறந்தன. இவ்வாறு, நிலநடுக்கத்தில் பலியானர்களுக்குத் தங்களது துக்கத்தைத் தெரிவித்தன.சீன அரசவையின் தீர்மானத்துக்கு இணங்க, மே திங்கள் 19 முதல், 21ம் நாள் வரையான நாட்கள் தேசிய துக்க நாட்களாகும். இந்நாட்களில், ஒலிம்பிக் தீபத் தொடரோட்ட நடவடிக்கை, நிறுத்தப்படும். சீன முழுவதிலும் வெளிநாடுகளிலுள்ள சீன வாரியகங்களிலும், கொடிகள் அரை கம்பத்தில் பறக்கும். எல்லா பொழுது போக்கு நடவடிக்கைகளும் நிறுத்தப்பட்டுள்ளன.
|