• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-05-19 11:00:08    
சீனாவின் datang என்ற கால் உறை உற்பத்தி இடம்

cri
Datang என்ற சிறிய நகர், சீனாவில் அதிகமாக அறியப்படவில்லை. ஆனால் அங்குள்ள கால் உறை தொழிலினால், அத்தொழில் வட்டாரங்களில் இந்த சிறிய நகர் புகழ் பெற்றுள்ளது. இன்றைய நிகழ்ச்சியில், தற்சார்புப் புத்தாக்கம் datangயின் பொருளாதாரத்துக்கு புதிய தெம்பு ஊட்டுவது என்பது பற்றி அறிமுகப்படுத்துகிறோம்.

datang, கிழக்கு சீனாவின் zhejiang மாநிலத்தில் அமைகிறது. முன்பு சுமார் ஆயிரம் பேர் மட்டுமே இங்கு வாழ்ந்தனர். தற்போது, இந்நகரில், 60 ஆயிரத்துக்கு அதிகமானோர் வாழ்வதோடு, ஆண்டுக்கு 800 கோடி கால் உறைகளை உற்பத்தி செய்கின்ற கால் உறை தயாரிப்பு மையமாக மாறியுள்ளது. உலகில் உள்ள 10 ஜோடி கால் உறைகளில் 3, datangயில் தயாரிக்கப்பட்டவை என்று இந்நகராட்சியின் தலைவர் guo jianbo பெருமையுடன் செய்தியாளரிடம் கூறினார்.

தற்போது, datangஐ மையமாகக் கொண்டு, அருகிலான 12 சிறு நகரங்களும், ஒரு இலட்சத்திற்கு மேலான தொழிலாளர்களை உள்ளடக்கிய ஒரு தொழில் வட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. இது datang கால் உறை சிறப்பு துறை மண்டலம் என்று கூறப்படுகிறது. 2006ம் ஆண்டு அங்குள்ள ஆண்டு உற்பத்தி மதிப்பு, சுமார் 2800 கோடி யுவானை எட்டியது.

ஆனால் datang மக்கள், தாங்கள் பெற்றுள்ள சாதனைகளினால் பெருமையடையவில்லை. மேலும் பரந்த சர்வதேச சந்தையின் மீது அவர்கள் தம் பார்வையை செலுத்துகின்றனர்.

கால் உறை தொழிலின் எதிர்காலத்தை நாங்கள் கருத்தில் கொண்டு வருகிறோம். datangயின் நடைமுறை நிலைமையின்படி, கால் உறையின் தலைமையகம் என்ற கருத்தாக்கத்தை முன்வைத்தோம். இத்தொழிலில் மிக முக்கிய தொழில்நுட்பத்தை வளர்க்க வேண்டும். அதனால், இவ்வாண்டு நாங்கள் கால் உறை தொழிலின் பொது சேவை மேடையை உருவாக்கினோம்.

அந்தப் பொது சேவை மேடை, 2 கோடிக்கு மேலான யுவான் மதிப்புள்ளது. கால் உறை ஆய்வகம், உற்பத்தி பொருட்களின் தர சோதனை மையம், மின்னணு வணிக மையம், தர சான்று கையாளும் மையம் ஆகிய அமைப்புகள் அதில், அடங்குகின்றன. தவிர datang கால் உறை தொழிலின் இணையத்தளமும், தகவல் பகிர்வு முறைமையும் இதில் காணப்படுகின்றன.

கடந்த செப்டம்பர் திங்களில் இந்த பொது சேவை மேடை, நடைமுறைக்கு வந்த பின், பரந்த அளவில் அனைவராலும் பாராட்டப்பட்டது. அம்மேடையின் உருவாக்கம், ஆண்டுதோறும் தொழில் நிறுவனங்களில் செலவான, சுமார் 20 கோடி யுவானைக் குறைத்து, 200 கோடி யுவான் மதிப்புள்ள முன்பதிவுப் படிவங்களை அதிகரித்துள்ளது.

தவிர, புகழ் பெற்ற தொழில் நிறுவனங்களை உருவாக்கும் வகையில், உள்ளூர் அரசு ஊக்கத்தொகை கொள்கைகளை வகுத்தது. நாட்டளவில் நிலை புகழ் பெற்ற நிறுவனமாக மாறும் தொழில் நிறுவனங்கள், 5 இலட்சம் யுவான் ஊக்கத் தொகையை பெற முடியும். மாநில அளவில் புகழ் பெற்ற நிறுவனமாக மாறினால், 2 இலட்சம் யுவான் பெற முடியும். datang நகரட்சியின் தலைவர் guo jianbo கூறியதாவது,

அறிவியல் புத்தாக்கம், ஒவ்வொரு தொழில் நிறுவனத்தின் உயிர்நாடியாகும். கால் உறை தொழிலும் அதற்கு வதிவிலக்கு அல்ல. கால் உறை தொழிலிலான அறிவியல் தொழில்நுட்ப புத்தாக்கம், காப்புரிமை விண்ணப்பம் முதலியவற்றுக்கு வெகுமதி அளிக்கும் வகையில், பொது சேவை மேடை தவிர, சிறப்பு ஒதுக்கீடு செய்துள்ளோம். இது, உற்பத்திப் பொருட்களின் மேலதிக மதிப்பை அதிகரித்து முழு தொழிலையும் முன்னேற்றுவதற்கு சீரான பங்கு ஆற்றியுள்ளது என்றார் அவர்.

dan ji ya குழுமம், datangயில் மிக முன்னதாகவே அறிவியல் ஆராய்ச்சியை வலுப்படுத்திய தொழில் நிறுவனங்களில் ஒன்றாகும். இது, 2003ம் ஆண்டில் ஒரு ஆய்வு வகத்தையும், அறிவியல் தொழில்நுட்ப புத்தாக்க சேவை மையத்தையும் உருவாக்கியுள்ளது. இக்குழுமத்தின் பொறுப்பாளர் zhu tianyong கூறியதாவது,

எங்கள் தொழில் நிறுவனம், donghua பல்கலைக்கழகத்துடனும் zhejiang பொறியியல் கல்லூரியுடனும் ஒத்துழைக்கின்றது. இது வரை, நாங்கள் மூன்று அறிவியல் தொழில்நுட்ப சாதனைகள் பெற்றுள்ளோம். அத்தொழில் நுட்பத்தை பயன்படுத்தி உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள், நாட்டிலும் ஏன் உலகிலும் முன்னேறிய தர நிலையில் இருக்கின்றன.

huahai spandex தொழில் நிறுவனம், datang யிலான 2 புதிய உயர் தொழில் நுட்ப தொழில் நிறுவனங்களில் ஒன்றாகும். spandex என்ற முன்னேறிய மூலப்பொருளை இந்நிறுவனம் முயற்சியுடன் ஆராய்ந்து வருகிறது என்று அதன் துணை பொது மேலாளர் du chunshu கூறினார். அவர் மேலும் கூறியதாவது,

எங்கள் தொழில் நிறுவனத்தில் ஒரு அறிவியல் ஆய்வு மையம் இருக்கிறது. சந்தையிலான பல்வேறு தேவைகளின்படி, சோதனைகள் நடத்துகிறோம். சிறிய ரக சோதனை வசதிகளும் அதில் அடங்குகின்றன என்றார் அவர்.

danjiya, huahai போன்ற அறிவியல் ஆராய்ச்சிக்கும் தற்சார்பு புத்தாக்கத்துக்கும் முக்கியத்துவமளிக்கின்ற தொழில் நிறுவனங்கள், datang யில் மிக அதிகம். இந்நகரின் தலைவர் guo jianbo கூறியதாவது,

ஒரு தொழிலை, ஆராய்ந்து வளர்க்கும் பணியை நன்றாக மேற்கொள்ள வேண்டும். இல்லையேல், உற்பத்திப் பொருளின் மதிப்பை அதிகரிக்க முடியாது. அதன் பயன்பாட்டுக் காலமும் குறுகியதாக இருக்கும்.

தற்போது datang கால் உறை தொழில், ஒப்பிட்டளவில் முழுமையான அறிவியல் புத்தாக்க முறைமையை உருவாக்கியுள்ளது. இது datangக்கு புதிய உயிராற்றலைக் கொண்டுவந்தது. datang கால் உறை தொழில், உலக சந்தையில் மேன்மேலும் புகழ்பெற்றுள்ளது.