• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-05-19 09:54:44    
காற்று மாசுபாட்டு சுற்றுச்சூழலை மேம்படுத்தும்

cri
2008ம் ஆண்டு பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டி நடைபெறுவதை எதிர்நோக்கும் வகையில், இவ்வாண்டு, சீனாவின் சின் ஹாங் தாவ் நகர் 16 கோடி யுவானை ஒதுக்கீடு செய்து, காற்று மாசுபாட்டு சுற்றுச்சூழலை முழுவதுமாக மேம்படுத்தும் என்று சின் ஹாங் தாவ் நகர் சுற்றுசூழல் பாதுகாப்பு ஆணையத்திலிருந்து கிடைத்த தகவல் தெரிவிக்கின்றது.
இந்நகர், பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டியின் கால் பந்து போட்டிகள் நடைபெறும் இடமாகும். தவிர, திட்டப்படி, சின் ஹாங் தாவ் பல பயற்சிகளை ஏற்பாடு செய்யும்.

உலகில் மிகப்பெரிய நிலக்கரி ஏற்றுமதி துறைமுகங்களில் இதுவும் ஒன்றாகும். பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டியின் போது, சிறந்த சுற்றுச்சூழலுக்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில், சின் ஹாங் தாவ், புகை கட்டுப்பாட்டு திட்டத்தை பன்முகங்களிலும் நனவாக்கி, புகை வெளியேறும் அளவை குறைத்துள்ளதாக அறியப்படுகின்றது.
அனைத்து நிறுவனங்களும் பணித்தனங்களும், மாசுபாட்டு தடுப்பு நடவடிக்கைகளை பயன்மிக்க அளவில் மேற்கொள்ள வேண்டும் என்று சின் ஹாங் தாவ் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணையம் கோரியுள்ளது.
2008ம் ஆண்டு பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி வெற்றி பெறுவது உறுதி. சிலி அரசு செயலகத்தின் விளையாட்டு விவகார ஆணையத்தின் துணைத் தலைவர் Pizarro Santiago நகரில் சீன செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது, இவ்வாறு தெரிவித்தார்.

ஒலிம்பிக் விளையாட்டு போட்டி, உலக மக்களை ஊக்குவித்து, அவர்களுக்கு உயிராற்றல் தரும். பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டி வெற்றி பெறுவது உறுதி என்று Pizarro முழுமையாக நம்புகின்றார். பெய்சிங் ஒலிம்பிக் வெற்றிகரமாக நடைபெறுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ள சிலி அரசு விரும்புவதாகவும் அவர் கூறினார்.
2004ம் ஆண்டு ஏதென்ஸ் ஒலிம்பிக் விளையாட்டு போட்டியில், சிலி 2 தங்கம் மற்றும் 1 வெண்கல பதக்கங்களை பெற்றது. தென் அமெரிக்க நாடுகளில், இது மூன்றாவது இடம் வகித்து, பிரேசில் மற்றும் அர்ஜென்டீனாவுக்கு அடுத்த இடத்தில் இருந்தது. பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டியில், முந்திய ஒலிம்பிக் சாதனையைத் தாண்டுவது சிலியின் முக்கிய இலக்காகும் என்று Pizarro கூறினார்.

சீனாவின் கிழக்கு பகுதியிலுள்ள சின் தாவ் நகரில் நடைபெற்ற சர்வேதச வள்ள ஓட்ட கூட்டமைப்பு கூட்டத்தில் கலந்துகொண்ட சர்வதேச வள்ள ஓட்ட கூட்டமைப்பின் பிரதிநிதிகள் 11ம் நாள் சின் தாவ் ஒலிம்பிக் வள்ள ஓட்ட மையத்தை பார்வையிட்டி, பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டியின் வள்ள ஓட்டத்துக்கான ஆயத்த பணிகளை வெகுவாக பாராட்டியுள்ளனர்.
சின் தாவ் ஒலிம்பிக் வள்ள ஓட்ட போட்டிக்கான ஆயத்த பணிகள் சுமுகமாக நடைபெற்றது. பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டியின் வள்ள ஓட்ட போட்டி வெற்றிகரமாக நடைபெறும் என்று சர்வேதச வள்ள ஓட்ட கூட்டமைப்பின் தலைவர் Petersson பரணமாக நம்புகின்றார்.