இன்று காலை, சீனாவிலுள்ள 80க்கு மேலான நாடுகளின் தூதர்களும், சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகளும், சீன வெளியுறவு அமைச்சகத்திற்குச் சென்று, சிச்சுவானின் Wenchuan நிலநடுக்கத்தில், பலியானோருக்கு அஞ்சலி செலுத்தினர். சீனாவிலுள்ள, உலகின் 5 கண்டங்களைச் சேர்ந்த நாடுகளின் தூதர்களும், சர்வதேச அமைப்பின் பிரதிநிதிகளும், சீன அரசு மற்றும் மக்களுக்கு ஆழ்ந்த அனுதாபத்தையும், உளமார்ந்த ஆறுதலையும் தெரிவித்தனர். நிலநடுக்கத்தில் பலியானோருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தனர். பேரிடர் நீக்கப் பணியில், சீன அரசு மற்றும் மக்களின் வீர எழுச்சிக்கும், பெரும் முயற்சிகளுக்கும், அவர்கள் பாராட்டு தெரிவித்தனர். அனைத்து இன்னல்களையும் சமாளித்து, சீன அரசும் மக்களும், பாதிக்கப்பட்ட இடங்களை அருமையாக மறுசீரமைப்பது திண்ணம் என்று, அவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.
உயிர்த் தப்பி பிழைப்போர்களைக் கண்டறிந்து பாதுகாக்க, ஜப்பானிய நிலநடுக்க மீட்புதவிக் குழு, தன்னால் இயன்றதனைத்தையும் செய்யும். சீன மக்களின் மறுசீரமைப்பில், சீன அரசுடன் ஜப்பானிய அரசு, கூட்டு முயற்சியும் ஒத்துழைப்பும் மேற்கொள்ளும் என்று, சீனாவிலுள்ள ஜப்பானிய தூதர் Yuji Miyamoto தெரிவித்தார். நிலநடுக்க பேரிடர் நீக்கப் பணியிலான ஒத்துழைப்பைச், சீனாவும் ஜப்பானும் வலுப்படுத்த வேண்டும் என்று அவர் விருப்பம் தெரிவித்தார். சீன அரசுக்குத் தேவை இருந்தால், அமெரிக்கா, ரஷியா, ஸ்பெயின், கனடா ஆகியவை நிவராண உதவியை அதிகரிக்கும் என்று இந்த நான்கு நாடுகளின் தூதர்களும் தெரிவித்தனர். கடும் நிலநடுக்கத்தைச் சீன மக்கள் அனுபவித்த போதும், பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி இன்னும் வெற்றிகரமாக நடைபெறுவது திண்ணம் என்று, தென் ஆப்பிரிக்கா, தென் கொரியா முதலிய நாடுகளின் தூதர்கள் தெரிவித்தனர்.
|