• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-05-19 17:35:59    
இயற்கை சீற்றத்தை தோற்கடிப்பதில் நம்பிக்கை

cri
மே 12ம் நாள் பிற்பகல் 2.28 மணிக்கு சீனாவின் சிச்சுவான் வென்ச்சுவானில் நிலநடுக்கம் ஏற்பட்ட வுடன் சீன வானொலியின் தமிழ் பிரிவிலிருந்து வழங்கப்பட்ட செய்தி சரியான நேரத்தில் சன்நீயூஸ் தொலை காட்சி தமிழகத்தில் ஒளிப்பரப்பியது. பல நேயர்கள் அன்றிரவும் அடுத்த நாளை காலையும் தொலை பேசி மூலம் இரங்கல் தெரிவித்தனர். கடந்த சில நாட்களில் அவர்கள் நாள்தோறும் சீனாவின் சிச்சுவான் வென்ச்சுவான் நிலநடுக்கம் பற்றிய செய்திகளை உற்று கேட்டு கொண்டிருக்கின்றனர். பலர் ஆறுதலும் அனுதாபமும் தொடர்ந்து தொலை பேசி அல்லது மின்னஞ்சல் மூலம் தெரிவித்து வருகின்றனர். அவர்களின் கருத்துக்களை நாம் மொழிபெயர்த்து செய்தியாக அறிவித்துள்ளோம். இன்றைய செய்தித் தொகுப்பில் நண்பர்கள் மூவரின் கருத்தை வழங்குகின்றோம். முதலில் கடந்த ஆண்டு ஜுலை திங்களில் இராட்சத பாண்டாவின் ஊரான சிச்சுவானில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட பாண்டிசேரி என் பாலகுமாரின் கருத்தை கேளுங்கள். இயற்கை சீற்றத்தால் உலகில் மனித உயிர் பலியாகும் போதெல்லாம் என் மனம் வேதனை அடையும். அந்த வகையில் சிச்சுவான் மாநிலத்தில் நிகழ்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருவதை கேட்டு எனது மனம் அளவில்லா வேதனை அடைகிறது. அடுத்த இரு திங்களில் மாபெரும் ஒலிம்பிக் விளையாட்டு விழா நடைபெறும் சமயத்தில் இப்படி ஒர் அசம்பாவிதம் நடந்தது வருத்தத்திற்குரிய விடயம் தான். ஆனால் மிக விரைவாக இடர் நீக்கப் பணியை மேற்கொண்டது. சீன மக்களின் மன உறுதியை வெளிக்காட்டியது. நிலநடுக்கத்தில் உயிர் இழந்தோருக்கு இரங்களையும் அவர்களது பேரிழப்பால் துரரடையும் குடும்பத்தினருக்கும், பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்து கொள்கிறேன். சீன மக்கள் அளிக்கும் உதவியே போதுமானதாக இருந்தாலும், என்னால் சிறு உதவி கூட செய்ய வழி இல்லை என்று நினைக்கும்போது என் மனம் மேலும் சுமை அடைகிறேது. கடந்த ஆண்டு ஜீலை திங்களில் இந்த மாநிலத்தில் தான் நான் இன்பப் பயணம் மேற்கொண்டேன் என்பது குறிப்பிட்த்தக்கது. அந்த மக்கள் அளித்த அன்பான உபசரிப்பையும், ஆதரவையும் என்னால் என்றும் மறக்கமுடியாது. அப்பேர்பட்டவர்களுக்கு இப்படி ஒரு நிலைமை வந்ததை எண்ணி எண்ணி என் மனம் ஆறா துயரடைந்துள்ளது. நிலநடுக்கம் நடந்த நாளிலிருந்து தொலைக்காட்சி மற்றும் பத்திரிக்கை வழியாக பார்க்கும் காட்சிகளையும் புகைப்படங்களையும் பார்த்து பார்த்து மன வேதனை அடைகிறேன். ஒரே ஆறுதல் மீட்புப் பணியை தலைமை தாங்கி நடத்தும் சீன தலைமை அமைச்சர் வென்சியாபாவ் மற்றும் அனைத்து தலைவர்களின் வழிக் காட்டலில் விரைவில் இயல்பு வாழ்க்கை திரும்பும் என்ற நம்பிக்கை ஒளி என்னுள் உள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு, தமிழக நேயர்கள் அளிக்கும் உதவித்தொகையை சீன வானொலி மூலமாக அவர்களுக்கு சென்றடைய ஆவன செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். உங்கள் பதிலுக்கு பின்னர் தான் நேயர்களிடம் உதவி வேண்டி, தகவல் தெரிவிப்பேன். அதுவரை காத்து இருக்கிறேன். அடுத்து மூன்று நாட்களாக கலங்கி உண்ண விரும்பாத மனத்துடன் நிகழ்ச்சியை கேட்டு கருத்து தெரிவித்த சேந்தமங்கலம் எஸ் எம் இரவிச்சந்திரன் அவருடைய கருத்தை கேளுங்கள். அடுத்து பகளாயூர் பி.ஏ.நாச்சிமுத்து நேயர்களின் சார்பில் தெரிவித்த ஆறுதலை கேளுங்கள். இயற்கை அழிவை எதிர்நோக்கிய போது சீன அரசும் மக்களும் பயப்படாமல் துணிவுடன் மனிதர்களை காபாற்றியுள்ளனர். அவர்களின் வீரதீர செயல்களை உலக மக்களும் செய்தி ஊடகங்களும் பாராட்டியுள்ளன. தாயகத்தை மிக விரைவாக அருமையாக புனரமைப்பதில் எங்களுக்கு முழுமையான நம்பிக்கை உண்டு. எங்களுக்கு ஆறுதல் மற்றும் அனுதாபம் தெரிவித்த நண்பர்களுக்கு மிக்க நன்றி.