• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-05-19 16:48:12    
சிச்சுவான் நிலநடுக்கத்தில் உயிரிழந்தோருக்கு இரங்கல்

cri
மே திங்கள் 12ம் நாள் சிச்சுவான் மாநிலத்தின் வென்சுவான் மாவட்டத்தில் நிகழ்ந்த கடும் நிலநடுக்கத்தால், சீனாவின் சிச்சுவான், கான்சூ, சான்சி ஆகிய மாநிலங்களில் 34 ஆயிரத்துக்கு மேலானோர் உயிரிழந்தனர். 2 இலட்சத்து 40 ஆயிரத்துக்கு கூடுதலானோர் காயமுற்றனர். நிலநடுக்கத்தில் உயிரிழந்தோருக்கு சீன மக்கள் அனைவரின் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கும் பொருட்டு, மே திங்கள் 19 முதல் 21ம் நாள் வரை, நாட்டின் இரங்கல் தெரிவிக்கும் நாட்களாக, சீன அரசு முடிவு செய்துள்ளது. இம்மூன்று நாட்களில், ஒலிம்பிக் தீபத் தொடரோட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள. முழு சீனாவிலும், வெளிநாடுகளிலுள்ள சீனாவின் பல்வேறு வாரியங்களிலும், தேசிய கொடிகள் வழக்கமாக ஏற்றிய பிறகு, அக்கொடிகளை அரை கம்பத்தில் பறக்க விடுவதோடு, பொது பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளையும் நிறுத்தி வைக்க வேண்டும்.

தியான் அன் மன் சதுக்கத்தில்

நேயர்களே, நீங்கள் கேட்டுக்கொண்டிருப்பது, சீன மக்கள் குடியரசின் நாட்டு பண் ஒலியாகும். மே 19ம் நாள் விடியற்காலை 4:58 மணிக்கு, பெய்ஜிங்கின் தியான் அன்மன் சதுக்கத்தில், நாட்டு பண் ஒலியுடன், ஐந்து நட்சத்திர செங்கொடி ஏற்றப்பட்ட பிறகு, கொடி அரை கம்பத்தில் பறக்க விடப்பட்டு, சிச்சுவான் கடும் நிலநடுக்கத்தில் உயிரிழந்தோருக்கு இரங்கல் தெரிவித்தது.

விடியற்காலை, தியான் அன் மன் சதுக்கத்தில் கொஞ்சம் குளிராக இருந்தபோதிலும், ஆயிரக்கணக்கான நகரவாசிகள், ஒன்று சேர்ந்து குழுமியிருந்தனர். நகரவாசி தியான் குவாங்ஹுய் எமது செய்தியாளரிடம் கூறியதாவது

நிலநடுக்கத்தின் பாதிப்பை அறிந்து, மிகவும் வேதனையடைந்தேன். ஆனால், பேரிடரைச் சமாளித்த போது, எமது தாய்நாட்டில் முன்கண்டிராத ஒற்றுமை ஏற்பட்டது என்றார் அவர்.

அதிகாரிகள்

பெய்ஜிங் நகரவாசிகளைத் தவிர, பெய்ஜிங்கில் கல்வி பயின்று, வேலை செய்கின்ற வெளியூர் மக்கள் தியான் அன் மன் சதுக்கத்தில் வந்து, கொடி ஏற்றும் விழாவில் கலந்துகொண்டனர். ரோ வென்சின் என்பவர், சென்சான் நகரவாசி ஆவார். வேலை செய்வதற்காக பெய்ஜிங்கில் தற்காலிகமாக தங்குகின்றார். பாதிக்கப்பட்ட மக்கள், முழு நாட்டு மக்களின் உதவியுடன், தாயகத்தை மறுபடியும் சீரமைக்க முடியும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

நாங்கள் அவர்களை ஆதரித்து, உதவி செய்து வருகின்றோம். சிச்சுவான் மக்கள், தங்கள் தாயகத்தைச் சீரமைக்க பாடுபட வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.

நகரவாசி Dun shixin, கொடி ஏற்றும் விழாவுக்குப் பின் உடனடியாக சென்றுவிடவில்லை. சில நிமிட நேரம் அமைதியாக நின்றார். இந்தப் பேரிடர், மாபெரும் துரதிருஷ்டமாகும். சீனா, தேசிய இரங்கல் நாளை வகுத்து, கொடிகளை அரை கம்பத்தில் பறக்கச் செய்வது என்பது, இரங்கலைத் தெரிவிக்கும் வழியை, பொது மக்களுக்கு வழங்கியுள்ளது மட்டுமல்ல, உயிருக்கான அரசின் மதிப்பையும் கவனத்தையும் எடுத்துக்காட்டியுள்ளது என்று அவர் குறிப்பிட்டார். அவர் மேலும் கூறியதாவது:

பொது மக்கள்

அனைத்து சீன மக்களைப் பொருத்தவரை, இது, நல்ல குடிமக்கள் கல்வியாகும். தேசிய இரங்கல் நாளை வகுப்பது, மக்களின் ஆற்றலைப் பிரதிபலித்துள்ளது என்றார் அவர்.

சீனாவில் கல்வி பயின்ற அமெரிக்க மாணவர் Joe Bircher இன்று தியான் அன் மன் சதுக்கத்தில் நடைபெற்ற தேசிய கொடி ஏற்றும் விழாவில் கலந்துகொண்டார். அவர் கூறியதாவது:

நிலநடுக்கத்தில் ஏராளமான பேர் உயிரிழந்துள்ளது, மிகவும் பரிதாபகரமானதாக இருக்கிறது. ஆனால், சீனா, முழு மூச்சுடன் பேரிடர் நீக்கச் செயல்பாடுகளை மேற்கொண்டுள்ளது என்றார் அவர்.

பேரிடர் நீக்கப் பணியில் ஈடுபட்ட படைவீரர்கள்

இன்று காலை, சீன வெளியுறவு அமைச்சகத்திலும், வெளிநாடுகளிலுள்ள சீனத் தூதரகங்களிலும், தேசிய கொடிகள் அரை கம்பத்தில் பறக்க விட்டுள்ளதோடு, அஞ்சலி பதிவு புத்தகங்களையும் கொண்டுள்ளன.

இன்று பிற்பகல் 2 மணி 28 நிமிட நேரத்தில், சீனாவில் மக்கள் அனைவரும் மூன்று நிமிட நேரம் அமைதியாக, இறந்தோருக்கு இரங்கல் தெரிவித்தனர். அதே வேளை, வாகனங்கள், தொடர்வண்டிகள் மற்றும் கப்பல்களின் ஒலிப்பான்களும், வான் தாக்குதல் தடுப்பு எச்சரிக்கை சங்கும், ஓரே நேரத்தில் ஒலித்தன.