தற்போது, சீனாவில் போதிய சந்தை விநியோகம் உத்தரவாதம் செய்யப்பட்டுள்ளது. பல்வேறு பிரதேசங்கள் ஆக்கப்பூர்வமாகப் பேரிடர் பணிக்கு ஆதரவு அளித்து வருகின்றன. பாதிக்கப்பட்ட சிச்சுவான் மாநிலத்தில் சந்தை விநியோகம் உத்தரவாதம் செய்யப்பட்டுள்ளது என்று சீன வணிக அமைச்சர் chen de ming தெரிவித்தார்.
சிச்சுவான் மாநிலத்தின் செங் து, மியன் யாங் முதலிய நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டப் பிரதேசங்களில் சந்தை விநியோகம் நிலைமையைச் சோதனையிட்டப் பின், அவர் இவ்வாறு தெரிவித்தார். பாதிக்கப்பட்ட மக்களைக் குடியமர்த்தும் இடங்களில், மக்களுக்கு வசதி அளிக்கும் வகையில் சிறு கடைகள் தற்காலிகமாக அமைக்கப்படுகின்றன. அரிசி, கோதுமை மாவு, எண்ணெய், முட்டை, காய்கறி முதலிய உணவுப் பொருட்கள் மற்றும் பல்வகை அன்றாட வாழ்க்கை பயன்பாடுகளின் விநியோகமும் சீற்றத்துக்குப் பிந்திய மறுசீரமைப்புக்குத் தேவையான பொருட்களின் விநியோகமும் தொடர்ந்து சிறப்பாக ஏற்பாடு செய்யப்படும் என்று chen de ming கூறினார்.
|