இன்று பெய்சிங்கில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு மன்றத்தின் 3வது கூட்டத்தில், மன்ற உறுப்பினர் மற்றும் பார்வையாளர் நாடுகளின் பிரதிநிதிகளும், சிச்சுவான் மாநிலத்தில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் உயிரிழந்தோர்களுக்கு இரங்கல் தெரிவித்ததோடு, சீன அரசின் பேரிடர் நீக்கப்பணிக்கு உறுதியான ஆதரவு தெரிவித்தனர்.
அக்கூட்டம் துவங்குவதற்கு முன், கலந்து கொண்ட நுற்றுக்கு அதிகமான பேர் எழுந்து நின்று, உயிரிழந்தோருக்கு இரங்கல் தெரிவித்தனர்.
சீன அரசுத் தலைவர் ஹு சிந்தாவ், சீனத் தலைமை அமைச்சர் வென் சியாபாவ் ஆகியோர் நேரிடையாக பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு சென்று, மக்களுக்கு ஆறுதல் தெரிவித்ததோடு, பேரிடர் நீக்கப்பணிக்கு தலைமை தாங்கியதே சர்வதேச சமூகத்தில் ஆழமான பதிவை ஏற்பத்தியுள்ளது என்று ஷாங்காய் ஒத்துழைப்பு மன்றத்தின் துணை தலைமைச் செயலாளர் Vladimier Zakharov கூறினார். சீன அரசின் உறுதியான ஆட்சியில், சீன மக்கள் இன்னலைசமாளிப்பது உறுதி என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
|