வெளிநாட்டு மீட்புதவி மருத்துவ சிகிச்சைக்குழுக்கள் சில, சீனாவில் பேரிடர் நீக்கப்பணியில் ஈடுபடுவதை சீனச் செஞ்சிலுவை சங்கம் ஏற்றுகொள்ளும்.
இன்று பெய்சிங்கில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில், சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் Qin Gang இவ்வாறு தெரிவித்தார்.
நிலநடுக்கத்துக்கு பின், சீனாவில் பேரிடர் நீக்கப்பணியில் ஈடுபடுவது பற்றிய சில வெளிநாடுகள் மற்றும் செஞ்சிலுவை சங்கங்களின் விருப்பம் குறித்து, சீன அரசும் மக்களும் ஆழ்ந்த நன்றி தெரிவிப்பதாக அவர் கூறினார். சீன அரசு தங்களால் இயன்ற அளவில் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் பேரிடர் நீக்கப்பணியை மேற்கொண்டு வருகின்றது. தற்போதைய கள தேவையை கருத்தில் கொண்டததால், வெளிநாட்டு மீட்புதவி மருத்துவ சிகிச்சைக்குழுக்கள் சில சீனாவில் பேரிடர் நீக்கப்பணியில் ஈடுபடுவதை சீனச் செஞ்சிலுவை சங்கம் ஏற்றுகொள்ளும். பேரிடர் நீக்கப்பணி பற்றி, பல்வேறு நாடுகளுடன் இணைந்து தொடர்பு கொள்ள சீனா விரும்புகின்றது என்று அவர் கூறினார்.
|