இன்று, சீன உள நல உதவிக்குழு, சிச்சுவான் மாநிலத்தில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மியன் யாங் நகருக்குச் சென்று, பாதிக்கப்பட்ட மக்களுக்கான பெருமளவு உள நல ஆற்றுப்படுத்தல் பணியை துவங்கியது.
சீனச் சுகாதார அமைச்சகத்தைச் சேர்ந்த நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் உள்ளிட்ட 10க்கு அதிகமான மருத்துவ நிறுவனங்களிலிருந்து வந்த 300 பயணியாளர்கள் இவ்வுள நல உதவிக்குழுவில் இடம்பெறுகின்றனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு பெருமளவில் உள நல ஆற்றுப்படுத்தல் வழங்கப்படுவது இதுவே சீனாவில் முதன்முறையாகும். நிலநடுக்கத்தால் பாதிக்கப்ப்டட மக்கள், காயமுற்றோர், அனாதைக் குழந்தைகள் ஆகியோருக்கு உள நல ஆற்றுப்படுத்தல் வழங்கப்படும். மியன் யாங் நகர் மட்டுமல்ல, இதர பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கும் சென்று அவர்கள் தொடர்ந்து பணியை மேற்கொள்வர் என்று தெரிய வருகின்றது.
|