• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-05-19 18:31:36    
வெளிநாடுகளிலுள்ள சீன நிறுவனங்களின் இரங்கல்

cri

பெய்சிங் நேரப் படி இன்று பிற்பகல் 2.28 மணிக்கு, வெளிநாடுகளிலுள்ள சீனத் தூதரகங்கள், சீன நிறுவனங்கள் ஆகியவற்றைச் சேர்ந்த பணியாளர்கள், சீன அமைதி காப்புப் படை அதிகாரிகள் மற்றும் போர்வீரர்கள், சீன மருத்துவ சிகிச்சைக் குழுக்களின் உறுப்பினர்கள் முதலியோர், சீனாவிலுள்ள மக்களுடன் இணைந்து 3 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தி, சிச்சுவான் மாநில நிலநடுக்கத்தில் உயிரிழந்த உடன்பிறப்புக்களுக்கு இரங்கல் தெரிவித்தனர்.

 

அமெரிக்காவிலுள்ள சீனத் தூதரகம்

பெய்சிங் நேர படி இன்று விடியற்காலை முதல், வேறுபட்ட இடங்களில் உள்ள சீனத் தூதரகங்கள், சர்வதேச அமைப்புகளிலுள்ள பிரதிநிதி அலுவலகங்கள், சீன நிறுவனங்கள், சீன அமைதி காப்புப் படை முதலியவை கொடிகளை அரை கம்பத்தில் பறக்க விட்டதன் மூலம் உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தின.